விலை உயர்ந்த ஆடம்பர் கார்களில் ஆடி (Audi) காரும் ஒன்று. பெரிய பெரிய பணக்காரர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் ஆடி காரில் செல்வதை பார்த்திருப்போம்.
கேரளாவைச் சேர்ந்த இளம் விவசாயி சுஜித், சாலையோர சந்தையில் காய்கறிகளை விற்க ஆடி ஏ4 சொகுசு காரில் வந்தது கவனத்தை ஈர்த்தது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சுஜித் தனது ஆடி காரை சந்தைக்கு ஓட்டிச் செல்லும் போது, வயலில் பயிர்களை விளைவித்து, அவற்றை ஆட்டோரிக்ஷாவில் ஏற்றிச் செல்வதை வீடியோவில் காணலாம்.
ஆண்களைத் தாக்கும் இரைப்பை ஏற்றத்தால் சந்திக்கும் அபாயம் தெரியுமா?
காய்கறிகளை விற்கும் முன் பிளாஸ்டிக் ஷீட் அமைத்து அதில் காய்கறிகளை அடுக்கி வைக்கிறார். அந்த பொருட்களை விற்று விட்டு அவர் தனது ஆடம்பரமான காரில் ஏறி புறப்பட்டு செல்கிறார்.
சுஜித் இந்த ஆடி காரை செகண்ட் ஹாண்டில் வாங்கியதாக கூறப்படுகிறது. இது 2.0-லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது அதிக பட்சமாக 320 Nm மற்றும் 204 குதிரைத்திறன் கொண்டது.
இந்த செடானின் பவர்டிரெய்ன் 7-ஸ்பீடு TC கியர் பாக்ஸுடன் இணைக்கப் பட்டுள்ளது. ஆடி A4 7.1 வினாடிகளுக்குள் 100 கிமீ/ மணிக்கு வேகமடைகிறது. புதிய ஆடி கார் ரூ.44 லட்சம் முதல் ரூ.52 லட்சம் வரை விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks for Your Comments