குரோஷியாவில் பாடும் கடல்... அறிவியல் அதிசயத்தின் பின்னணி?

1 minute read
0

குரோஷியாவில் பாடும் கடல் தளம் அல்லது பிளாட்ஃபாரம் ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது. இயற்கையுடன் அறிவியலும் சேர்ந்து இந்த அற்புதத்தை உருவாக்கி யுள்ளனர்.

குரோஷியாவில் பாடும் கடல்... அறிவியல் அதிசயத்தின் பின்னணி?
குரோஷியாவின் சேடார் என்ற இடத்தில், இருக்கும் கடலின் மீது ஒரு பிளாட்பாரம் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் பெயர் சீ ஆர்கன் (Sea Organ). உள்ளூர் மக்கள் இதனை Morske Orgulje என்று அழைக்கின்றனர்.

இந்த தளம் கட்டமைக்கபட்ட பிறகு, சேடார் குரோஷியாவின் முக்கியமான ஈர்ப்புகளில் ஒன்றாக மாறி விட்டது. நிகோலா பேசிக் என்ற குரோஷிய கட்டடக்கலை நிபுணர் தான் இந்த தளத்தை உருவாக்கினார். 

குரோஷியாவின் ஒரு பெரிய நீர்முனை சீரமைப்பின் திட்டத்தின் பகுதியாக கட்டமைக்கப் பட்டது இந்த சீ ஆர்கன். இந்த தளம் பார்ப்பதற்கு ஒரு சாதாரணமான மேடை போல காட்சியளிக்கலாம். 

ஆனால் நீருக்கடியில், நீர்குழாய்கள், வாட்டர் சேனல்கள் கொண்டுள்ளது. இந்த கட்டமைப்பானது, ஏட்ரியாட்டிக் கடலுக்குள் இறங்கும் படிக்கட்டுகளில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.

இந்த குழாய்களுக்குள் அலைகள் வந்து போகும் போது ஒரு சிம்ஃபனி ராகம் இயற்கையாக உருவாகிறது. ஒரு ஒரு முறை அலை அடித்து வெளியேறும் போதும் ஒவ்வொரு விதமான இசை உருவாகிறது.

ஒரு இசைக் கருவியில் இருந்து தானே இசை நாதம் ஒலிக்கும்? அதனால் இந்த தளத்தை சீ ஆர்கன் (கருவி) என்று அழைக்க தொடங்கினர்.

இந்த கடலலைகள் எழுப்பும் இசை தான் இந்த இடத்தின் சிறப்பே. இந்த ஒலியில் அடங்கி யிருக்கும் அமைதி, நமது மனதை இளகச் செய்கிறது.

வெவ்வேறு நீளம், மற்றும் அளவிலான பாலி எத்திலீன் பைப்புகள் கொண்டு இந்த சீ ஆர்கன் உருவாக்கப் பட்டுள்ளது. சுமார் 70 மீட்டர் தூரத்திற்கு இந்த குழாய்கள், படிக்கட்டு களுக்குள் புகுத்தப் பட்டுள்ளன. 

கடலலையும் காற்றும் இணைந்து எழும் ஒலியானது, விசில், பறவை சத்தம் என, வெவ்வேறு நாதங்களாக ஒலிக்கின்றன.

பாஸ்ட் புட் சாப்பிட்டால் கேன்சர் உண்டாகும்

கடலலை அதிகமாக இருக்கும் போது சத்தம் அதிகமாகவும், குறைவாக இருக்கும் போது ஒரு மெல்லிய விசில் போலவும் ஒலிக்கிறது. குரோஷியா சென்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடம் இந்த Sea Organ.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 7, April 2025
Privacy and cookie settings