இங்கிலாந்து நகரம் பர்மிங்ஹாம் திவால் ஆனது.. அதிர வைத்த உண்மை !

0

இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம், போதிய வருமானம் இல்லாததால் திவால் ஆனதாக அறிவித்துள்ளது. திவால் நிலைக்கு சம ஊதிய திட்டமே முக்கிய காரணமாக பார்க்கப் படுகிறது.

இங்கிலாந்து நகரம் பர்மிங்ஹாம் திவால் ஆனது.. அதிர வைத்த உண்மை !
பர்மிங்ஹாம் கவுன்சிலில் உள்ள பெண் ஊழியர்களுக்கு சம ஊதியம் வழங்க உத்தரவிட்டது. இதற்கான போதுமான பணம் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. 

இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம் நகரத்தின் கவுன்சில், கடந்த செப்டம்பர் 5 முதல் திவாலானதாக அறிவித்துள்ளது. 

அத்தியாவசிய செலவுகளைத் தவிர அனைத்து செலவினங்களுக்கும் பணம் தற்காலிகமாக நிறுததப் பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக பர்மிங்ஹாம் நகர கவுன்சில், கடந்த செவ்வாய்கிழமை அன்று 114 அறிவிப்பை (திவால் அறிவிப்பு) வெளியிட்டது. 

ஏற்கனவே இங்கிலாந்தில் நார்த் ஆம்டான்ஷைர், வோக்கிங், க்ராய்டன் மற்றும் துராக் உள்ளிட்ட நகர கவுன்சில்கள் அத்தியாவசிய செலவுக்கு தவிர வேறு செலவுக்கு பணம் இல்லை என்று திவால் அறிவிப்பை (114 அறிவிப்பு) வெளியிட்டன. 

சில்லி சீஸ் பரோட்டா தயாரிப்பது எப்படி?

அந்த வரிசையில் இங்கிலாந்தின் மிகப்பெரிய நகரமான பர்மிங்ஹாம் இணைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பர்மிங்காம் நகர கவுன்சில் திவால் ஆகி விட்டதாக அறிவித்து விட்ட நிலையில், அந்த நகரத்தின் நிதி சிக்கலை தீர்த்து மீட்பதற்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தலைமையிலான அரசு மறுத்து வருகிறது. 

இங்கிலாந்து நகரம் பர்மிங்ஹாம் திவால் ஆனது.. அதிர வைத்த உண்மை !

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர் மேக்ஸ் பிளேன் செய்தி யாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். 

அவர் கூறும் போது, பர்மிங்ஹாம் நகர சபைக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 10 சதவிகிதம் கூடுதல் நிதியை இங்கிலாந்து அரசு வழங்கி விட்டது. 

எனவே நகர கவுன்சில் தான் இனி அதன் சொந்த வரவு செலவு திட்டத்தை நிர்வகித்துக் கொள்ள வேண்டும் என்றார். 

இங்கிலாந்தை பொறுத்தவரை ஒரு நகராட்சி, தன்னால் செலவை ஈடு செய்ய முடியாத நிலை வந்து விட்டது என்று கருதி விட்டால், அந்த நகராட்சி சார்பில் 114 அறிவிப்பு வெளியிடப் படுகிறது. 

தினை – கேரட் ரைஸ் செய்வது எப்படி?

அந்த வகையில் நார்த் ஆம்டான்ஷைர், வோக்கிங், க்ராய்டன் மற்றும் துராக் ஆகிய இங்கிலாந்து நகரங்கள் ஏற்கனவே பிரிவு 114 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. 

அத்தியாவசியச் செலவுகளைத் தவிர மற்ற அனைத்தும் நிறுத்தப்படும் என்பது தான் 114 அறிவிப்பின் பொருள் ஆகும். திவால் நிலைக்கு சம ஊதிய திட்டமே முக்கிய காரணமாக பார்க்கப் படுகிறது.

பர்மிங்ஹாம் கவுன்சிலில் உள்ள பெண் ஊழியர்களுக்கு சம ஊதியம் வழங்க உத்தரவிட்டது. இதற்கான போதுமான பணம் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. 

இங்கிலாந்து நகரம் பர்மிங்ஹாம் திவால் ஆனது.. அதிர வைத்த உண்மை !

பர்மிங்ஹாமில் பெண் ஊழியர் களுக்கான சம ஊதியக் கோரிக்கைகளுக்கு £760m வரை செலவாகும் என்று ஜூலை மாதத்தில் மதிப்பிட்டிருந்தது. 

ஜூன் மாதம், பர்மிங்ஹாம் நகர கவுன்சில் பெண் தொழிலாளர்களுக்கு 1.1 பில்லியன் பவுண்டுகள் செலுத்தி உள்ளது. ஆனால் இன்னும் 650-750 மில்லியன் பவுண்டுகள் வழங்க வேண்டிய பொறுப்பில் பர்மிங்ஹாம் நகர சபை இருக்கிறது. 

தானிய தோசை செய்வது எப்படி?

தற்போதைய நிலையில் ஒரு மாதத்திற்கு 5 மில்லியன் பவுண்டுகள் முதல் 14 மில்லியன் பவுண்டுகள் வரையே திரட்டப் படுகிறது. இந்த சூழலில் தான் பர்மிங்ஹாம் நகரம் திவால் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings