என்பீல்டு பைக் ஓட்டும் சிறுவன்... குவியும் கண்டனமும் பாராட்டும் !

0

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஒரே நாள் இரவில் மிகப்பெரும் பிரபலமாக மாறி விட்டார் இந்த சிறுவன். ஆனால் சோசியல் மீடியாவில், இந்த சிறுவனுக்கு கடுமையான கண்டனங்கள் பதிவாகி வருகின்றன. 

என்பீல்டு பைக் ஓட்டும் சிறுவன்... குவியும் கண்டனமும் பாராட்டும் !
இந்தச் சிறுவன் ஏதோ டிவிஎஸ் 100 ஓட்டுகிறான் என தவறாக நினைத்து விடாதீர்கள். இவர் ஓட்டும் பைக் எல்லாமே அதிக சிசி திறன் உள்ளவை. முக்கியமாக ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 மற்றும் யமஹா RX100 பைக்குகளில் இவர் சாகசம் செய்கிறார். 

இவரின் சாகசம் இதோடு நின்று விடவில்லை. சிறிய ரக மோட்டர் சைக்கிள் முதல் டாடா ஜெனான் டிரக் வரை சர்வ சாதாரணமாக ஓட்டிச் செல்கிறார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்த சிறுவன் எந்தவித வாகனத்தையும் மிகவும் தன்னம்பிக்கையோடு எந்த பயமும் இல்லாமல் ஓட்டுகிறான். 

அவர் பைக்கை லாவகமாக ஓட்டும் திறமையும் அதை கண்ட்ரோல் செய்யும் விதமும் உண்மையில் ஆச்சர்யத்தை தருகிறது. இந்த வயதில் இதெல்லாம் சாத்தியம் தானா என்ற கேள்வி தான் நமக்கு எழுகிறது.

தற்போது பலரும் பைக்கில் சாகசம் செய்யும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அதில் பெரும்பாலானவை கரணம் தப்பினால் மரணம் என்ற ரகத்தில் தான் இருக்கும். அந்த விதத்தில் இந்தச் சிறுவன் கொஞ்சம் மாறுபடுகிறார். 

சிறுவனும் அவரது தந்தையும் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இவர் செய்யும் சாசகங்கள் அனைத்துமே பாதுகாப்பான இடங்களில் நடைபெறுகிறது. 

சாலைகளில் அவர் வாகனம் ஓட்டுவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பைக்கின் கியரும் பிரேக்கும் சிறுவனுக்கு எட்டவில்லை என்றாலும், மிகவும் கச்சிதமாக பைக்கை பேலன்ஸ் செய்து ஓட்டுகிறார். 

சிறிய திணறல் கூட இல்லை. எந்த அளவிற்கு பைக்கின் இயங்குவியலை இச்சிறுவன் புரிந்து வைத்துள்ளார் என்பது இதன் மூலம் தெரிகிறது. இன்னொன்றையும் சொல்ல வேண்டும். 

பேய் ஓட்டுவதாக கூறிய சாமியார் - கதறி அழுத பெண் !

இச்சிறுவன் ஒவ்வொரு முறை பைக் ஓட்டும் போதும் பாதுகாப்பிற்காக அவரது தந்தை அருகிலேயே இருக்கிறார். தேவைப்படும் சமயத்தில் தனது மகனுக்கு உதவியும் செய்கிறார்.

இவரது வீடியோக்களுக்கு பல ரசிகர்கள் இருந்தாலும், இந்த வயதில் இது தேவையற்ற விஷயம் என்றும், இது வாகன விதிப்படியும் தவறும் என்றும் பலர் கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings