சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.
தூய்மையான காற்றுள்ள இடங்களை தேடி அலையும் மனிதர்களுக்கு உலகில் சில இடங்களே மிஞ்சியுள்ளது.
எலும்பு வலிமையாக இருக்க ஆரோக்கிய டிப்ஸ் !
உலகிலேயே அதிக தூய்மையான இயற்கை காற்று நிறைந்த பகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கேப் கிரிம் என்று அழைக்கப்படும் இந்த தீபகற்ப பகுதி அவுஸ்திரேலிய தீவான டாஸ்மேனியாவின் வடமேற்கு முனையில் உள்ளது.
உலகின் விளிம்பு என்று பிரபலமாக அறியப்படும் கேப் கிரிமிற்கு மிக குறைவானவர்களே சென்றுள்ளனர்.
காற்றின் தரத்தை அளவிடும் ஒரு நிலையம் இங்கு அமைக்கப்பட்டு, பூமியிலேயே இந்த பகுதியில் தான் மிகவும் சுத்தமான காற்று இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஹவாய் தீவில் உள்ள மௌனா லோவா நிலையம், மக்குவாரி தீவு, அண்டார்டிகாவில் உள்ள கேசி நிலையம் உள்ளிட்டவற்றில் தூய்மை நிறைந்த இயற்கை காற்று உள்ளது.
Thanks for Your Comments