பெண் குரலில் போலீஸ் கமிஷனர் என மிரட்டி பணம் பறித்த நபர் !

0

சமூக வலை தளங்களில் பெண் குரலில் பேசி வீடியோ காலில் வரவழைத்து அந்தரங்க வீடியோ எடுத்து பின்னர் உதவி போலீசஸ் கமிஷ்னர் என மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண் குரலில் போலீஸ் கமிஷனர் என மிரட்டி பணம் பறித்த நபர் !

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியைச் சேர்ந்தவரை சமூக வலைதளம் வாயிலாக தொடர்பு கொண்ட பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக அவருடன் நட்பாக பழகி வந்தார். 

இதை அடுத்து வீடியோ காலில் தொடர்பு கொண்ட பெண் சம்பந்தப் பட்டவரை வரச் சொல்லி வற்புறுத்தினார். அவர் கூறியபடி வீடியோ காலில் வந்தார். அப்போது வீடியோ அவர் பதிவு செய்துள்ளார்.

செயற்கை முறை கருக்கட்டல் எப்படி செய்யப்படுகிறது?

அடுத்த நாளில் சம்பந்தப்பட்ட நபரிடம் மொபைல் போனில் பேசிய ஒருவர் தன்னை புதுடில்லி உதவி போலீஸ் கமிஷனர் ராம்பாண்டே என அறிமுகப் படுத்திக் கொண்டார். 

அவர் தன்னிடம் அவரின் அந்தரங்க வீடியோ உள்ளதாக கூறி மிரட்டினார். இதனால் அந்த நபர் கடும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதை நீக்க ஒன்பது லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும் மிரட்டி உள்ளார். 

இதனால் பாதிக்கப்பட்ட நபரும் அந்த பணத்தை வழங்கினார். அடுத்த சில நாட்களில் மீண்டும் தொடர்பு கொண்ட ராம் பாண்டே மேலும் 15 லட்சம் தருமாறு மிரட்டி உள்ளார். 

இதனால் மேலும் அதிர்ந்த பாதிக்கப்பட்ட நபர் காவல் துறையில் புகார் அளித்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரிடம் பெற்ற தகவலின் பெயரில் காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் ஏமாற்றியவர் மகேந்திர சிங் என்பவர் என தெரியவந்தது. இவருக்கு வயது 36. இவர் பெண் குரலில் பேசியும், உதவி போலீஸ் கமிஷனர் போல் பேசியும் பணத்தை பறித்தது தெரிய வந்தது. 

இதை அடுத்து அரியானா மாநிலத்தின் மேவத் பகுதியில் இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

சிறு வயதில் பூப்படைவது காரணமும் உணவுகளும் !

கடந்த சில ஆண்டுகளாக இது போன்று மகேந்திர சிங் பலரிடம் அவர் ஏமாற்றி பணம் பறித்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மகேந்திர சிங் ஏமாற்றியவர்கள் குறித்த பட்டியலை சேகரிக்கும் பணியில் தற்போது காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings