மதுரையில் சிக்கன் குழம்பு சாப்பிட்ட தந்தை, மகள் உயிரிழப்பு !

0

இந்தியாவில் அசைவ உணவுகளைச் சாப்பிடுவோரின் எண்ணிக்கை தான் அதிகம். குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர பெரும்பாலான மாநிலங்களில் அசைவ உணவுகளைச் சாப்பிடுவோரே அதிகம்.

மதுரையில் சிக்கன் குழம்பு சாப்பிட்ட தந்தை, மகள் உயிரிழப்பு !
குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் பெரும்பாலான மக்கள் அசைவ உணவுகளையே சாப்பிடுகிறார்கள். அதிலும் பெரும்பாலான மக்களுக்கு வார இறுதி அல்லது விடுமுறை நாட்கள் என்றாலே அசைவ உணவுகள் தான் தேவைப்படும்.

இதற்கிடையே சரியான முறையில் சமைக்கப்படாத சிக்கன் உள்ளிட்ட உணவுகளைச் சாப்பிட்டு உயிரிழப்புகள் ஏற்படும் சம்பங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. 

அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது மதுரையில் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள பகுதியில் சிக்கன் சாப்பிட்ட தந்தை மற்றும் மகள் எதிர்பாராத விதமாக உடல் உபாதைகளால் உயிரிழந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கவுதம் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. 

இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தையும் இருந்தது. கவுதம் இப்போது கரூரில் சொந்தமாகப் பண்ணை வைத்து நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. 

கவுதம் நேற்றிரவு அருகே உள்ள கடையில் இருந்து சிக்கன் வாங்கி வந்துள்ளார்.நேற்றிரவு சிக்கன் குழம்பு வைத்து மூவரும் சாப்பிட்டுள்ளனர். 

இருப்பினும், இரவு சிக்கன் குழம்பைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அந்த 4 வயது சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

இரவில் திடீரென மயங்கி விழுந்ததால் பதறிய பெற்றோர் உடனடியாக தங்கள் குழந்தையைத் திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

அங்கே குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்ட போதிலும், உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. இதையடுத்து மேல் சிகிச்சைக்காகக் குழந்தையை ராஜாஜி அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். 

அங்கே குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், அந்த 4 வயதுக் குழந்தை சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இன்று காலை உயிரிழந்தது. இதற்கிடையே கவுதமிற்கும் திடீரென உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. 

அவருக்கும் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவருக்கும் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார். தாய்- மகள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 

இதையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிந்துபட்டி போலீஸ், தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். முதற்கட்டமாக அவர் எந்தக் கடையில் சிக்கன் வாங்கினார். 

நேற்றிரவு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது அங்கே பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. பொதுவாகவே சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளில் புரதம் அதிகமாகக் கிடைக்கும். 

இதன் காரணமாகவே பலரும் அதை எடுத்துக் கொள்கிறார்கள். இருப்பினும், சிக்கன் எந்தவொரு அசைவ உணவாக இருந்தாலும் அதை நன்கு சமைக்க வேண்டும். 

கோவை ஆனந்தாஸ் நெய் போளி செய்வது எப்படி?

அதிக வெப்பநிலையில் அதை முறையாகச் சமைத்துச் சாப்பிட வேண்டும். முறையாகச் சமைக்கப்படாத அரைவேக்காடு உணவுகளைச் சாப்பிட்டால் அவை மோசமான உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings