மத்திய ஆப்பிரிக்க நாடான உருவாண்டாவில் வசித்து வருபவர் கல்லிட்க்ஸ் நிசம்விட்டே. இவர் தனது 16 வயதில் இருந்து எந்தவொரு பெண்ணையும் பார்க்க விரும்பவில்லை.அப்போது முதல் வீட்டில் தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம், நான் இங்கே உள்ளே என்னை தனிமைப் படுத்திக் கொண்டதற்கும் என் வீட்டிற்கு வேலி வைத்திருப்பதற்கும் காரணம், பெண்கள் என்னை நெருங்கி வரக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது தான்.
எதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் தனது இளம் பருவத்தில் தனக்கு பயத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். வெளியில் சென்றால் பார்க்க நேரிடும்.
அது தனக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தும் என்று எண்ணி 55 ஆண்டுகளாக தனது வீட்டை விட்டு வெளியில் கூட வருவதில்லை.
ஆனால் என்னதான் அவர் பெண்களுக்குப் பயந்தாலும், அக்கம் பக்கத்தினர் குறிப்பாக உள்ளூர்ப் பெண்கள் தான் அவர் 55 ஆண்டுகளாக உயிர் பிழைக்க உதவுகிறார்கள்.
யாராவது அவருக்கு உதவ முயற்சித்தால், அவர் யாருடனும் பேசுவதற்கு அருகில் செல்ல கூட விரும்பவில்லை. எனவே, அவருக்குத் தேவையானதை அவர் வீட்டிற்குள் வீசுவது தான் வழக்கமாம்.
அதை ஆட்கள் யாரும் இல்லாத நேரங்களில் வெளியே வந்து எடுத்துக் கொள்வாராம். தனது வீட்டின் வழியாக எதாவது பெண் கடந்து சென்றால் கூட உள்ளே ஓடி கதவை பூட்டிக் கொள்வாராம்.
அந்த முதியவர் பெண்களின் மீதான பகுத்தறிவற்ற பயமான கைனோபோபியா என்ற உளவியல் நோயால் பாதிக்கப் படுகிறார் என நம்பப்படுகிறது.
ஆனால் அதை சோதனை செய்வதற்கான வாய்ப்புகளை கூட அவர் தரவில்லை. இருப்பினும், மருத்துவ அமைப்பில், இது குறிப்பிட்ட பயம் என வகைப்படுத்தி யுள்ளனர்.
அந்த பயத்தோடு இருக்கும் போது பீதி, மார்பில் இறுக்கம், அதிக வியர்வை, இதயம் வேகமாக துடித்தல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை ஏற்படுமாம்.
Thanks for Your Comments