உலகத்தில் யுத்தங்கள் உருவான காலத்தில் இருந்து பல்வேறு வியூகங்கள் கடைபிடிக்கப் படுவது வழக்கம்.. இந்த போர் வியூகங்களில் பல்லாயிரம் ஆண்டுகால புதிர்களை கொண்டவை சுரங்க பாதைகள்.
திண்டுக்கல் மலைக் கோட்டைக்கும் திருச்சி மலைக் கோட்டைக்கும் சுரங்க பாதை இருக்கிறது என்பது சிறுபிராயத்து 'அம்புலி மாமா' கதை.. திருச்செந்தூருக்கும் பாஞ்சாலங் குறிச்சிக்கும் சுரங்கப் பாதை இருப்பதாக புனைவு பாடல்கள் இருக்கின்றன.
இவை எல்லாம் சாத்தியங்களா? என்ற எகத்தாள கேள்விகளுக்கு எல்லாமும் சாத்தியமாகத் தான் இருக்க முடியும் என்கிற பதிலைத் தருகின்றன
பாலஸ்தீனத்தின் காஸாவில் 100 அடிக்கு கீழே ஹமாஸ் ஜிஹாதிகள் கட்டி அமைத்திருக்கும் சுமார் 500 கி.மீ நீள சுரங்க பாதைகள். இஸ்ரேலின் மொழியில் சொல்வதானால் இவை காஸா மெட்ரோ.
கொரில்லா யுத்தம், மரபுவழி ராணுவ யுத்தம், முப்படைகள் யுத்தம் தாண்டி நிலக்கீழ் யுத்த பாணி அண்மைய வரலாறுகளில் அதிகம் பேசப்படாதவை.
இப்போது பாலஸ்தீன ஹமாஸ் ஜிஹாதிகள் மூலம் சர்வதேச அரங்கில் பேசு பொருளாகி இருக்கிறது 'நிலக்கீழ்' யுத்த பாணி. இது குறித்த சில முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.
2021-ம் ஆண்டு இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் ஹமாஸ் ஜிஹாதிகளின் 100 கி.மீ நீள சுரங்க உறைவிடங்களை அழித்தொழித்து விட்டோம் என்றது.
அட்லாண்டிக்கும் பசிபிக் பெருங்கடலும் கலக்கவில்லை ஏன்?
ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான யாக்யா சின்வார், எங்கள் சுரங்க உறைவிடம் 500 கி.மீ. நீளம் கொண்டது. நீங்கள் அழித்தது வெறும் 5% என பிரகடனம் செய்தார்.
ஆக ஹமாஸ் ஜிஹாதிகளின் சுரங்கம் என்பது கட்டுக் கதை அல்ல. நிஜம் என்பது திட்டவட்டமானது. ஹமாஸ் ஜிஹாதிகளின் சுரங்க உறைவிடம் எவ்வளவு பெரியது என்பதற்கு உதாரணமாக இப்படி சொல்லலாம்.
இஸ்ரேல் காஸாவில் பொது மக்களின் கட்டிடங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்களை குறி வைத்து அழிக்கிறது என்கிற கதறல்கள் ஒரு பக்கம்.
ஆனால் இஸ்ரேலோ, இந்த பொதுமக்களின் கட்டிடங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்களின் கீழேதான்யா ஹமாஸ் ஜிஹாதிகளின் சுரங்க உறைவிடங்களே இருக்கின்றன என வாதிடுகிறது.
2007-ம் ஆண்டு காஸாவை ஹமாஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அன்று தொடக்கம் இந்த பிரம்மாண்ட நிலக்கீழ் யுத்த பாணிக்கான சுரங்கங்களை கட்டமைத்து கொண்டே இருக்கிறது.
இஸ்ரேலுக் குள்ளும் எகிப்துக் குள்ளும் நீண்டு போகிறதாம் ஹமாஸின் இந்த சுரங்க உறைவிடங்கள்.
இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந் தேதி ஹமாஸ் ஜிஹாதிகள் தொடங்கிய பல்லாயிரக் கணக்கான ஏவுகணைத் தாக்குதல்களில் இந்த சுரங்க உறைவிடங்கள் பெரும் பங்களிப்பு செய்திருக்கின்றன என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.
வெள்ளை பூசணி சாம்பார் செய்வது எப்படி?
இஸ்ரேலுக் குள்ளும் நீண்டு கிடக்கும் யாரும் அறியாத சுரங்கங்கள் வழியாகவே சரமாரி தாக்குதல்கள், ஊடுருவல்களை ஹமாஸ் ஜிஹாதிகள் நடத்தி இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதும் கணிப்பாக இருக்கிறது.
ஹமாஸ் ஜிஹாதிகளின் இந்த சுரங்க உறைவிடங்கள் அதிநவீன வசதிகளால் நிரம்பிக் கிடப்பவை.
ஒட்டு மொத்த ஹமாஸ் ஜிஹாதிகளின் வாழ்விடங்களாக, பாசறைகளாக, கட்டுப்பாட்டு அறைகளாக, போர் ஆலோசனைகள் நடக்கும் இடங்களாக பன்முகத் தன்மையுடன் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன.
காஸாவை ஹமாஸ் ஜிஹாதிகள் கையகப்படுத்தும் முன்னர் கடத்தல் தொழிலுக்காக சுரங்கங்கள் பயன்படுத்தப் பட்டன. இந்த சுரங்கங்களை 'மாற்றி யோசி'த்து நிலக்கீழ் யுத்த களமாக்கி விட்டனராம் ஹமாஸ் ஜிஹாதிகள்.
இஸ்ரேல் 'பயங்கரவாத சுரங்க உறைவிடங்கள்' என்றே இவற்றை அழைப்பது உண்டு. இதனாலேயே காஸா பகுதிக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு 2014-ல் இஸ்ரேல் தடை விதித்த ஒரு சரித்திரமும் இருக்கிறது.
ஹமாஸ் ஜிஹாதிகளின் இத்தகைய சுரங்கங்கள் எங்கே தொடங்கி? எங்கே முடிக்கிறது? எங்கே வாயில்கள் இருக்கின்றன?
நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்ற இந்த டீயை குடிங்க !
எத்தனை நாடுகளைத் தொட்டு நிற்கின்றன? என்பதெல்லாம் எந்த உளவுப் படையாலும் 'மோப்பம்' பிடித்து விடாத பெரும் புதிராகவே சுட்டிக் காட்டப் படுகிறது.
Thanks for Your Comments