உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபத்தில் உள்ளது பிஜ்னோர் என்ற மாவட்டம். இங்கு வசித்து வருகிறார் அந்த நபர். கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கு தடபுடலாக கல்யாணம் நடந்துள்ளது.
தன்னுடைய மனைவி ஒரு திருநங்கை என்பதை அறிந்து இடிந்து போனார். அந்த அறையிலேயே இருவருக்கும் தகராறும் வெடித்தது.
இதய கட்டிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை !
இனிமேல் ஒரு நிமிடம் கூட உன்னுடன் வாழ முடியாது என்று திருநங்கை மனைவியிடம் உறுதியாக சொல்லி விட்டார். அத்துடன் விவாகரத்து செய்ய போவதாகவும் அறிவித்தார்.
இதைக் கேட்டதும் மனைவி ஆவேசமடைந்தார். தான் பாலின மாற்றத்திற்கு உள்ளாகி யிருப்பதாகவும், இதை வெளியே யாரிடமாவது சொன்னால், பொய் கேஸ் போட்டு, ஜெயிலில் தள்ளுவேன் என்றும் மிரட்டி யிருக்கிறார்.
இப்படியே 4 வருடங்கள் உருண்டோடி விட்டன. இந்நிலையில், தற்போது திடீரென கோட்வாலி போலீசில், தன்னுடைய திருநங்கை மனைவி மற்றும் மாமியார் மீது புகார் தந்துள்ளார்.
அந்த புகார் மனுவில் உள்ளதாவது:
என்னுடைய திருநங்கை மனைவியும், என் மாமியாரும், பணம் கேட்டு அடிக்கடி என்னை தாக்கி துன்புறுத்துகிறார்கள்.
என்னை 2 பேரும் சேர்ந்து, நிர்வாண வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, மேலும் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். 20 லட்ச ரூபாய் தராவிட்டால் அந்த நிர்வாண வீடியோவை வெளியிடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.
நான் மறுக்கவும், அவர்கள் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து சித்ரவதை செய்தார்கள். 4 வருடங்களாகவே, இந்த டார்ச்சர் நடந்து கொண்டிருக்கிறது.
எனவே, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டும் திருநங்கை மனைவி, அவரது அம்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த புகார் மனுவை பார்த்ததுமே போலீசார் மிரண்டு போய் விட்டார்கள்.
இந்த புகாரின் பேரில், இந்திய தண்டனை சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்),
பிரிவு 384 (பணம் பறித்தல்), பிரிவு 420 (ஏமாற்றுதல்), பிரிவு 504 (ஆத்திரமூட்டும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
Thanks for Your Comments