திருமணத்தில் பாம்பு வரதட்சணையாக கொடுப்பதை பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். ஒரு சமூகத்தினர் தங்களுடைய திருமணத்தின் பொழுது பாம்புகளை வரதட்சணையாக மணமகனுக்கு கொடுக்கிறார்கள்.
சத்தீஸ்கரின் கோர்பாவில் உள்ள சன்வாரா பழங்குடியினர் அவர்கள் சமூகத்தில் நடைபெறும் திருமணங்களில் ஒரு விசித்திரமான பாரம்பரிய பழக்க வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.
வைரம் பற்றிய நாம் அறியா விஷயங்கள் !
பொதுவாக திருமணம் நடைபெறும் பொழுது வரதட்சணை கொடுக்கப் படுவது வழக்கம். பொதுவாக மணமகனுக்கு மணமகள் தரப்பிலிருந்து இந்த வரதட்சணை கொடுக்கப் படுகிறது.
அது போல சன்வாரா பழங்குடியினர் தங்களுடைய பிள்ளைகள் திருமணத்தின் பொழுது வரதட்சணையாக பாம்புகளை கொடுக்கிறார்கள்.
பழங்காலம் முதலே பின்பற்றி வரக்கூடிய இந்த பாரம்பரியம் இப்பொழுதும் மிக முக்கியமானதாக திருமணங்களில் நடைபெறுகிறது.
மணமகள் திருமணம் முடிந்த பிறகு 9 வெவ்வேறு வகையான பாம்புகளை மணமகனின் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இப்படி எடுத்துச் செல்ல தவறினால் அந்த திருமணம் முழுமை அடையாததாக கருதப்படுகிறது.
அது மட்டுமல்ல இந்த சமூகத்தினர் பாம்பு பிடிப்பவர்கள் என்பதால் இவர்களுடைய குழந்தைகளுக்கு கூட பாம்பு பிடிக்க தெரியும் என்கிறார்கள். குழந்தைகள் பாம்புகளைப் பிடித்து அவைகளுடன் விளையாடுவார்கள் என சொல்கிறார்கள்.
பாம்புகளை வரதட்சணையாக கொடுப்பது இவர்களுடைய சமூகத்தில் மிக முக்கியமான ஒரு பாரம்பரிய வழக்கம். இவர்களுடைய முன்னோர்கள் வரதட்சணையாக 60 பாம்புகளை கொடுத்துள்ளார்கள்.
விமானத்தில் எடுத்துச் செல்லக் கூடாதது?
அதனால் பாம்புகளை எப்படியாவது தேடி கண்டுபிடித்து திருமணத்தில் வரதட்சணையாக கொடுக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக இந்த வழக்கம் இவர்களிடையே உள்ளது.
Thanks for Your Comments