காசாவுக்கு அடியில் புதைந்துள்ள மினி நகரம்.. இஸ்ரேலுக்கு மரண பொறி !

0

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் கூட, தரை வழி படையெடுப்பை ஆரம்பித்தால் அங்குள்ள நிலைமை தலைகீழாக மாறும் அபாயம் இருக்கவே செய்கிறது. அதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.

காசாவுக்கு அடியில் புதைந்துள்ள மினி நகரம்.. இஸ்ரேலுக்கு மரண பொறி !
இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் தொடங்கியது முதலே இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாகக் காசா பகுதியில் இஸ்ரேல் தனது ஏவுகணை தாக்குதலைத் தீவிரப்படுத்தி யுள்ளது.

ஆனால் காசா மீது இஸ்ரேல் தரைவழியாகத் தாக்குதலை ஆரம்பித்தால் அது அவ்வளவு எளிதாக நிச்சயம் இருக்காது. இதன் காரணமாகவே அவ்வப்போது தாக்குதலை நடத்தினாலும் முழு படையெடுப்பைத் தொடங்காமல் இஸ்ரேல் அமைதியாக இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் சுரங்கப் பாதைகள் தான்.. காசாவுக்கு அடியில் பல கிமீ தொலைவில் விரிவான சுரங்கப் பாதை இருக்கிறது. 

பொழுது போக்குக்காக இவர் என்ன சேகரித்துள்ளார் பாருங்கள் !

80 அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கம், ஒரு சிலந்தி வலை போலக் குழப்பமானது என்று விடுவிக்கப்பட்ட பிணையக் கைதி ஒருவர் எச்சரித்துள்ளார். 

காசாவில் 360 கிமீ நீளத்திற்குக் கடலோர பகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு முழுக்க சுரங்கப் பாதைகள் இருக்கிறது.

மேலும், என்றாவது ஒரு நாள் தங்கள் மீது தாக்குதல் நடக்கும் என்பதை உணர்ந்த ஹமாஸ் படை, காசாவில் விரிவான சுரங்கப் பாதைகளை உருவாக்கி யுள்ளனர். 

தாக்குதல், கடத்தல், சேமிப்பு கிடங்குகள் என ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒவ்வொரு வகையான சுரங்கங்களை ஹமாஸ் படை வைத்திருக்கிறதாம். 

பிணையக் கைதிகள் அனைவரும் இந்த சுரங்கப் பாதையில் அடைத்து வைக்கப் பட்டுள்ள நிலையில், அது நிலைமையை மேலும் சிக்கலான ஒன்றாக மாற்றுகிறது.

இதனால், காசாவுக்குள் இஸ்ரேல் படையெடுப்பை ஆரம்பித்தால் ஹமாஸ் படையிடம் இருந்து மிகப் பெரிய சவாலை இஸ்ரேல் எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

காசா பகுதி முழுக்க பரவி இருக்கும் கன்னி வெடிகளும் நிலைமையை மேலும் சிக்கலானதாக மாற்றுகிறது. இதைச் சமாளிக்கச் சுரங்கப்பாதை கண்டறியும் தொழில்நுட்பத்தில் இஸ்ரேல் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. 

குறிப்பாக நிலத்திற்கு அடியில் இருக்கும் பொருட்களைக் கண்டறியும் இரும்பு சுவர் தொழில்நுட்பத்திலும் இஸ்ரேல் முதலீடு செய்துள்ளது. 

கணவன் மனைவி தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள் !

இருப்பினும், அதைத் தாண்டியும் ஹமாஸிடம் இருக்கும் சுரங்கப் பாதைகளைச் சமாளிப்பது இஸ்ரேலுக்குக் கடினமாகவே இருக்கும் என்பதே வல்லுநர்களின் கருத்து.

காசா பகுதியில் மட்டும் ஹமாஸிடம் 500 கிலோ மீட்டருக்கு நீளச் சுரங்கப்பாதை இருப்பது உண்மை தான் என்று காசாவில் உள்ள ஹமாஸின் தலைவர் யெஹ்யா அல்-சின்வார் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் மிகவும் வலிமையானதாக இருக்கிறது. இதன் காரணமாகவே ஹமாஸ் தனது சுரங்கப் பாதைகளில் தனது செயல்பாடுகளை வடிவமைத்துள்ளது. 

மேலும், பிணையக் கைதிகளையும் சுரங்கத்தில் வைத்திருக்கிறார்கள். இஸ்ரேல் படையெடுப்பை ஆரம்பிக்கும் போது அவர்கள் வேறு வழியின்றி இந்த சுரங்கப் பாதைகளில் செல்ல வேண்டும். 

இந்த குறுகலான சுரங்கப் பாதைகள் என்பது இஸ்ரேலுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ஏனென்றால் அந்த சிக்கலான குழப்பமான சுரங்கப் பாதைகள் என்பது இஸ்ரேல் வீரர்களுக்கு ரொம்பவே புதியது.. 

அதே நேரம் ஹமாஸ் வீரர்களுக்கு இந்த சுரங்கம் பற்றி A டூ Z வரை அனைத்துமே தெரியும்.

காசாவுக்கு அடியில் புதைந்துள்ள மினி நகரம்.. இஸ்ரேலுக்கு மரண பொறி !
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அவர்களிடம் விரிவான சுரங்கப் பாதைகள் இருப்பது உண்மை தான். என்னால், எத்தனை கிமீ நீளச் சுரங்கப் பாதை எனச் சொல்ல முடியாது. 

ஆனால், அது விரிவானது என்று மட்டும் சொல்கிறேன்.. பள்ளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் என அனைத்து கட்டுமானங்களுக்குக் கீழும் அதிகளவில் சுரங்கப் பாதையை அமைத்துள்ளனர் என்றார்.

இஸ்ரேல் நடத்தும் தொடர் ஏவுகணை தாக்குதல் சுரங்கப் பாதைகள் சற்று சேதப்படுத்தி இருந்தாலும் கூட இன்னும் பல கிமீ பாதைகளை ஹமாஸ் பயன்படுத்தியே வருகிறது. 

பாதங்கள் வீங்குவது எதனால்? வீக்கத்தை எவ்வாறு குறைப்பது?

இவை எல்லாம் தான் இஸ்ரேல் படையெடுப்பை முழு வீச்சில் தொடங்குவதைத் தாமதிக்கக் காரணமாகும். 

அனைத்தையும் தாண்டி இஸ்ரேல் வீரர்கள் உள்ளே இறங்கினால், அவர்களே தங்கள் மரண குழிக்குச் செல்வதற்குச் சமம் என்றே வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings