தன் தாய்க்கு அதிர்ச்சி கொடுத்த விமானி.. வைரல் வீடியோ !

0

நம் பிள்ளைகள் ரயிலில் லோகோ பைலட்டாக அல்லது விமானங்களில் விமானியாக பணிபுரிந்தால் நிச்சயமாக அது நமக்கு பெருமைக்குரிய விஷயம் தான்.

தன் தாய்க்கு அதிர்ச்சி கொடுத்த விமானி.. வைரல் வீடியோ !
ஆனால், பயணம் செய்கின்ற குறிப்பிட்ட அதே நாளில் அந்த ரயில் அல்லது விமானத்தை நம் பிள்ளைகள் தான் இயக்கப் போகின்றனர் என்பதை உறுதியாக சொல்லிவிட முடியாது.

ஆனால் பயணிகளின் பட்டியலில் நமது பெயர் இருப்பதை பார்த்து நமது மகன் அல்லது மகள் நம்மை திடீரென்று வரவேற்றால் எவ்வளவு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி இருக்கும். 

எலுமிச்சம் பழத்தை பயன்படுத்த டிப்ஸ் !

அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. விமல் சசீதரன் என்ற நபர் இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வருகிறார். 

இவர் தனது தாயார் அதே விமானத்தில் பயணம் செய்ய இருப்பதை தெரிந்து கொண்டார். இந்த நிலையில் சக பயணிகளை போல தாயார் நடந்து வந்த நிலையில் அவரை விமான பணிக் குழுவினர் புன்னகையோடு வரவேற்றனர்.

பொதுவாக அனைத்து பயணிகளுக்கும் விமான பணிக் குழுவினர் வரவேற்பு அளிப்பது இயல்பான விஷயம் தான் என்ற அளவில் அந்த தாயார் நடந்து செல்ல, பின்னாலிருந்து அவரது மகன் அழைக்கிறார். 

இதை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிய அவரது தாய், தனது மகனை அரவணைத்துக் கொண்டு அன்பு மழை பொழிகிறார். 

அந்த சமயம் தாயும், மகனும் பெரு மகிழ்ச்சியில் புன்னகைக்க இறுதியாக அவரது தாய் ஆனந்த கண்ணீர் சிந்துகிறார். இந்த நிகழ்வு குறித்த வீடியோவை விமானி சசீதரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவுக்கான தலைப்பில் நான் இயக்க இருந்த விமானத்தில் எனது தாயார் வருவதை திடீரென்று தெரிந்து கொண்டேன். அவருடைய கண்களில் கண்ணீரை பாருங்கள். அதுவே எல்லாம் சொல்லும். 

காளான் மஞ்சூரியன் செய்வது எப்படி?

இது போன்ற நிகழ்வுகள் தான் வாழ்க்கையை சிறப்பு மிக்கதாக மாற்றுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. எண்ணற்ற பார்வைகளை பெற்று வரும் இந்த வீடியோவை பலரும் லைக் செய்து, பகிர்ந்து வருகின்றனர். 

இது குறித்து இன்ஸ்டாகிராம் பயனாளர் ஒருவர் பதிவிட்டுள்ள கமெண்டில், வாழ்வில் இதுபோன்ற நெகிழ்வான நிகழ்வுகள் நடப்பது இறைவன் கொடுத்த வரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆச்சரியமான தருணத்தில் அந்த தாய் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை அளவிட வார்த்தைகளே இல்லை என்று மற்றொரு பயனாளர் கூறியுள்ளார். 

வாழ்வில் இதே போல் நாமும் நம் பெற்றோரை ஏதோ ஒரு வகையில் ஆச்சரியப் படுத்த வேண்டும் என்று மற்றொரு கமெண்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings