சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது நம் அனைவரின் கனவாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த கனவை நிறைவேற்றுவது சாதாரண விஷயம் அல்ல.
செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும் போது சில விஷயங்களை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதைப் பார்க்காமல் வாங்கினால் இழப்பு ஏற்படலாம்.
பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. புதிய கார்களின் விலை அதிகம் இருப்பதாலும் EMI கட்டுவதில் பல சிக்கல் ஏற்படுவதாலும் குறைந்த விலைக்கு செகண்ட் ஹாண்ட் கார்களை வாங்க மக்கள் நினைக்கிறார்கள்.
பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான சந்தை மட்டும் இப்போது இருக்கும் 2.30 லட்சம் கோடி ரூபாய் விலையில் இருந்து 2028 ஆம் ஆண்டு 4.63 லட்சம் கோடியாக உயர்ந்து விடும் என்று கணிக்கப்படுகிறது.
அதிலும் தற்போது பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை புதிய கார்களின் எண்ணிக்கையை விட அதிகம் இருப்பதாக தெரிகிறது.
ஆனால் இப்படி செகண்ட் ஹாண்ட் கார்களை வாங்கினாலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். காரணம் நீங்கள் கொடுக்கும் விலை உண்மையில் அந்த காரின் விலைக்கு ஏற்ப உள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும். இந்த சந்தையில் பலர் ஏமாற்றப் படுகிறார்கள்.
ஹைபோக்ளைசிமியா என்றால் என்ன?
முதலில் உங்களுடைய உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்களிடம் இருந்து கார் வாங்கினல் நீங்கள் காரின் தரத்தை நம்பலாம்.
அந்நியரிடமிருந்து வாங்கினால் அந்தக் காரின் தரம் நம்ப முடியாத வகையில் இருக்கலாம். பின்னாட்களில் எதுவும் பிரச்சினை ஏற்பட்டாலும் நீங்கள் உறவினர்களிடம் கேட்க முடியும். உறவினர்களிடம் இல்லாத பட்சத்தில் நீங்கள் வேறு இடங்களில் முயற்சிக்கலாம்.
பட்ஜெட் திட்டம்
உங்களால் எவ்வளவு லட்சத்திற்கு காரை வாங்க முடியுமோ அதுவரை பட்ஜெட் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். எந்த வகை சார் வேண்டும் என்பதையும் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
சந்தை ஆராய்ச்சி
பட்ஜெட் நிர்ணயித்தவுடன் சந்தையில் அந்த விலைக்கு எந்த கார் கிடைக்கும் என்பதை ஆராய்ச்சி செய்துபாருங்கள். உங்களின் பட்ஜெட் விலைக்கு மீறி சில கார்கள் இருக்கும்.
ஆனாலும் நீங்கள் மனம் மாறாமல் உங்களின் பட்ஜெட் விலையிலேயே காரை தேடுங்கள். அப்படி தேடும் சமயம் காரின் விலை, EMI வசதி, கார் உற்பத்தி ஆண்டு, பராமரிப்பு செலவு, மைலேஜ், முக்கிய பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.
நல்ல விற்பனையாளர்
நேரடி உரிமையாளர்களிடம் கார் வாங்கினால் இன்னும் சிறப்பு. இப்படி செய்வதால் உரிமையாளர் பெயர் மாற்றம் என்பது சுலபமாக இருக்கும்.
இந்த அறிகுறிகள் இருந்தால் நிமோனியா உங்களை தாக்கும் தெரியுமா?
கார் ஆவணங்கள் முக்கியம்
அடுத்ததாக, காரின் விவரங்களைச் சரிபார்க்கவும். காரில் அனைத்து பேப்பர்களும் அப்டேட்டாக இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். காரை சரியான நபரிடமிருந்து வாங்குகிறோமா என்று பார்ப்பது அவசியம்.
தற்போது சலானை ஆன்லைனில் சரிபார்க்க அரசாங்கம் ஒரு போர்ட்டலை உருவாக்கி யுள்ளது. எனவே இப்போது எதையும் யாரிடமும் மறைக்க முடியாது.
காரின் வரலாறு
ஒரு காரை நீங்கள் தேர்வு செய்து விட்டால் அதன் பராமரிப்பு வரலாறு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலம் உங்களின் காரின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் வாங்கும் கார் ஏற்கனவே நன்றாக பராமரிக்கப் பட்டுள்ளதா?, என்ஜின் வேலை செய்யப் பட்டுள்ளதா? டயர்கள் நன்றாக இருக்கிறதா? அல்லது வேறு பிரச்சனைகள் ஏதாவது உள்ளதா? என்பதை எல்லாம் தெரிந்து கொள்ளலாம்.
கார் சோதனை
அதே போல காரை பல முறை சோதனை ஓட்டம் செய்து பாருங்கள். அதில் ஏதாவது பிரச்சனை உங்களுக்கு தெரிந்தால் காரின் விலையை குறைத்து பேச உதவும்.
சளி பிடித்திருந்தால் உடனே இதை செய்ங்க !
கார் வாங்குவது
கடைசியாக நீங்கள் காரை வாங்க முடிவு செய்து விட்டால் கார் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கேட்டுப் பெறுங்கள். இது பற்றி நன்கு தெரிந்த ஒருவரை அழைத்து சென்று வாங்குவது இன்னும் நன்றாக இருக்கும்.
Thanks for Your Comments