உயிரை பறித்த திடீர் வேகத்தடை.. கோவையில் நடந்த கொடூரம் !

0

கோவையில் அனுமதியின்றி புதிதாக அமைக்கப்பட்ட சாலை வேகத்தடையில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கோயம்புத்தூர், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் (26). 

உயிரை பறித்த திடீர் வேகத்தடை.. கோவையில் நடந்த கொடூரம் !
இவர் சேரன் மாநகரில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு 12 மணி அளவில் சந்திரகாந்த் கடையை மூடிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். 

கொடிசியா அருகே கீதாஞ்சலி பள்ளி அருகே இவரது இரு சக்கர வாகனம் வந்த பொழுது அங்கு புதிதாக அமைக்கப் பட்டிருந்த வேகத்தடையில் மோதி தடுமாறி கீழே விழுந்து சந்திரகாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த காட்சிகள் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இரவு நேரம் என்பதால் சாலையில் வேகத்தடை அமைக்கப் பட்டதற்கான குறியீடுகள் எதுவும் இல்லாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

அந்த வேகத்தடை திடீரென புதிதாக புதிதாக அமைக்கப் பட்டிருந்தது தெரியாமல் வழக்கம் போல் வேகமாக வந்த சந்திரகாந்த்தின் பைக் வேகத்தடையில் மோதி தடுமாறி கீழே விழுந்து இறந்திருக்கிறார் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். 

இதனிடையே விபத்து ஏற்பட்ட பின்னர் போலீசார் அவசர அவசரமாக வேகத்தடை இருப்பதற்கான குறியீடுகளை பெயின்ட் மூலம் அடித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
ஸ்கிப்பிங்‬ செய்தால் ஏற்படும் நன்மை ! 

மாநகராட்சி அனுமதியின்றி தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் வேகத்தடை அமைக்கப் பட்டிருந்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதனிடையே இந்த விபத்து குறித்த செய்திகள் வெளியான சில மணி நேரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அந்த வேதக்தடையை அகற்றி யுள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings