சொந்தமாக நிலம் வாங்குவது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் சவாலான விஷயம் ஏனெனில் மற்ற துறைகளை விட நிலத்தில் முதலீடு செய்வது என்பது இப்பொழுதும் பாதுகாப்பு.
தங்களுடைய சேமிக்கும் பணத்தை சொந்த நிலத்தில் முதலீடு செய்வது என்பதை முடிவு செய்து விட்டார்கள்.
படுக்கைக்கு செல்வதற்கு முன் பால் குடிப்பீங்களா? இத படிங்க !
அதனால் விளைநிலங்கள் முதல் புறம்போக்கு நிலம் வரை அனைத்து வகையான நிலங்களையும் வாங்குவதற்கு இப்பொழுது ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.
ஆனால் நீங்கள் நிலம் வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் அரசு புறம்போக்கு நிலம், நஞ்சை, புஞ்சை, இப்படி நிலங்கள் பலவகையாக இருக்கிறது.
நீங்கள் புறம்போக்கு நிலத்தை வாங்க முடியாது அது அரசுக்கு சொந்தம், புறம்போக்கு நிலம் என்றால் என்ன ஏன் இது புறம்போக்கு நிலம் என்று அழைக்கப் படுகிறது.
ஏன் இதை அரசாங்கம் கையகப்படுத்தி உள்ளது, என்பதை பற்றி பல்வேறு விதமான தகவல்களை இந்த கட்டுரையில் முழுமையாக காணலாம்.
புறம்போக்கு நிலம் என்றால் என்ன?
புறம்போக்கு நிலம் என்பதை அரசின் சொத்து என்று கூறலாம்,பொது பயன்பாட்டிற்காக அரசாங்கம் பயன்படுத்தும் நிலங்களை புறம்போக்கு நிலம் என்று அழைக்கப் படுகிறது.
சாலைகள், மேய்ச்சல் நிலங்கள், தரிசு நிலங்கள், கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால், போன்ற நீர்நிலைகள் மற்றும் சுடுகாடு போன்ற பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் நிலங்களை புறம்போக்கு நிலம் என்று அரசு தெரிவிக்கிறது.
இந்த புறம்போக்கு நிலங்களை தனியார் இல்லாத மாநில அரசு, மத்திய அரசு மற்றும் உள்ளாட்சி போன்ற அமைப்புகளால் நாடு முழுவதும் பராமரிக்கப் படுகிறது.
சமையலறையில இந்த இடங்கள மட்டும் தினமும் சுத்தம் செய்ய மறந்துடாதீங்க…
சோழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து புறம்போக்கு என்ற சொல் நம் தமிழ் மொழியில் பயன்பாட்டில் இருந்து வருகிறது என்று பண்டைய கால இலக்கியங்கள் தெரிவிக்கிறது.
இந்த நிலங்கள் வருவாய் அல்லாத வெளியே இருப்பதால் இரு புறம்போக்கு நிலம் என்று அழைக்கப் படுகிறது.
புறம்போக்கு நிலம் பற்றிய சில தகவல்கள்
மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை மக்கள் பயன்பாட்டு நிலங்கள் என்று அரசின் நிலங்கள் என்றும் அழைக்கப் படுகிறது.
நீர்நிலைகள், மருத்துவ மனைகள், நூலகங்கள், பேருந்து நிலையம், தபால் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், போன்றவை அமைப்பதற்கு பயன்படுத்துகிறது.
அரசு இந்த புறம்போக்கு நிலத்தில் நிலமற்ற ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தையும் செயல் படுத்துகிறது.
இது போன்ற பயன்பாடுகளுக்காக அரசு இந்த நிலங்களுக்கு இலவச பட்டா மனை வழங்குகிறது. ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய், ஓடை, போன்ற நீர் நிலைகளையும் புறம்போக்கு நிலம் என்று அரசு அறிவிக்கிறது.
நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என்று அரசு கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது.
அதனால் அது போன்ற புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கக் கூடாது என்று அரசும் மற்றும் உயர்நீதி மன்றமும் உச்ச நீதிமன்றம் தெளிவாக ஒரு வரையறை தெரிவித்துள்ளது.
குழந்தைகள் ஏன் சாப்பிடுவதில்லை? இது ஒரு நோயா?
அந்த இடத்திற்கு அவருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று நீதிமன்றமும் அரசும் தெரிவிக்கிறது குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு நிலத்தை நத்தம் புறம்போக்கு நிலம் என்று அரசு தெரிவிக்கிறது.
Thanks for Your Comments