ஜப்பானில் அணு குண்டுக்குத் தப்பிய பெண்ணின் அனுபவங்கள் !

0

நாகசாகியில் அணு குண்டு வெடிப்பு நடந்த போது, ரெய்க்கோ ஹடாவிற்கு 9 வயது. முன்னதாக அன்று காலையில், விமானத் தாக்குதல் குறித்த எச்சரிக்கை இருந்தது. எனவே ரெய்க்கோ வீட்டிலேயே இருந்து விட்டார்.

ஜப்பானில் அணு குண்டுக்குத் தப்பிய பெண்ணின் அனுபவங்கள் !
அச்சம் நீங்கி விட்டதாக அறிவிப்பு வந்ததும், அருகில் உள்ள கோவிலுக்கு அவர் சென்றார். தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடந்ததால் பள்ளிக்குச் செல்லாத அந்தப் பகுதி குழந்தைகள் அந்தக் கோவிலில் தான் படிப்பார்கள்.

கோவிலில் சுமார் 40 நிமிடம் ஆசிரியர் பாடம் நடத்துவார். அது முடிந்ததும் ரெய்க்கோ வீட்டுக்கு வருவார். நான் எங்கள் வீட்டின் வாயிலுக்கு வந்தேன். ஓர் அடிகூட உள்ளே எடுத்து வைக்கவில்லை என்று ரெய்க்கோ விவரித்தார்.

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க? எப்போது என்ன சாப்பிடலாம்?

அந்த சமயத்தில் திடீரென அது நடந்தது. பிரகாசமான வெளிச்சம் என் கண்களைத் தாக்கியது. மஞ்சள், காக்கி மற்றும் ஆரஞ்சு நிறத்தில் அவையெல்லாம் சேர்ந்த கலவையான நிறமாக அது இருந்தது.

அது என்ன என்று பார்ப்பதற்குக் கூட எனக்கு அவகாசம் இல்லை. திடீரென எல்லாமே வெள்ளையாகி விட்டது.

நான் மட்டும் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தேன். அடுத்த விநாடி பெரிய சப்தம் கேட்டது. பிறகு எனக்கு எதுவுமே தெரியவில்லை.

சிறிது நேரம் கழித்து நினைவுக்கு வந்தேன். அவசர தேவை ஏற்பட்டால், விமானத் தாக்குதலில் இருந்து தப்புவதற்கான பதுங்கு குழிகளுக்குள் சென்றுவிட வேண்டும் என்று எங்களுடைய ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருந்தார். 

எனவே உள்ளே இருந்த என் தாயாரை அழைத்துக் கொண்டு, அருகில் இருந்த பதுங்கு குழிக்குச் சென்றேன்.

எனக்கு ஒரு சிராய்ப்பு கூட இல்லை. கோன்பிரா மலைதான் என்னைக் காப்பாற்றியது. ஆனால் மலையின் மறுபக்கம் இருந்தவர்கள் நிலை வேறு மாதிரி இருந்தது. அவர்கள் கொடூரமான பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தனர்.

நிறைய பேர் கோன்பிரா மலைக்கு ஓடினர். கண்கள் வெளியில் பிதுங்கிய நிலையில், கோரமான தலைமுடிகளுடன், ஏறத்தாழ நிர்வாணமாக, 

தீக்காயங்கள் அடைந்து, உடலின் தோல்கள் எரிந்து பிய்ந்து தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் மலைக்கு ஓடினார்கள்.

என் தாய், வீட்டில் இருந்த துண்டுகள் மற்றும் போர்வைகளை எடுத்துக் கொண்டார். தப்பி ஓடிய அந்தப் பகுதியைச் சேர்ந்த மற்ற பெண்களுடன் அருகில் கல்லூரியில் இருந்த ஆடிட்டோரியத்துக்கு ஓடினோம். அங்கு அவர்கள் படுத்துக் கொள்ள முடிந்தது.

அவர்கள் தண்ணீர் கேட்டார்கள். அவர்களுக்கு தண்ணீர் தரும்படி எனக்குச் சொன்னார்கள். எனவே ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள ஆற்றுக்குச் சென்று அவர்களுக்குத் தண்ணீர் எடுத்து வந்தேன்.

உடல் வளர்ச்சிக்கு புரதம் நிறைந்த சைவ உணவுகள் !

தண்ணீரை விழுங்கியதும் அவர்கள் இறந்தனர். ஒருவரை அடுத்து இன்னொருவர் என அடுத்தடுத்து இறந்தார்கள்.

நீச்சல் குளத்தில் சடலங்களைக் கொட்டி...

ஜப்பானில் அணு குண்டுக்குத் தப்பிய பெண்ணின் அனுபவங்கள் !

அது கோடைக் காலம். இறந்தவர்களின் உடல்களில் மாமிசப் புழுக்கள் உருவாகி விட்டதாலும் மற்றும் மோசமான நாற்றம் வீசியதாலும், உடனடியாக உடல்களை எரிக்க வேண்டிய தாயிற்று. 

கல்லூரியின் நீச்சல் குளத்தில் எல்லா உடல்களையும் குவித்துப் போட்டு, மரக்கட்டைகளை மேலே போட்டு தீ வைத்தனர். அதில் யாரெல்லாம் கிடந்தார்கள் என்று அறிந்து கொள்வது கஷ்டமான விஷயம். அவர்கள் மனிதர்களைப் போல சாகவில்லை.

அதிகாலையில் எழ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

எதிர்கால தலைமுறையினர் யாருக்கும் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டுவிடக் கூடாது. அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

மக்கள் தான் அமைதியை உருவாக்க வேண்டும். நாம் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும், வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும், அமைதிக்கான நம்முடைய நாட்டம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் என்று அவர் கூறினார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings