எமிரேட்ஸ் (Emirates), உலகின் பிரபலமான ஏர்லைன் நிறுவனமான இது, கூடுதலாக 15 ஏர்பஸ் ஏ350-900எஸ் விமானங்களை புதியதாக வாங்குகிறது.
உலகளவில் பிரபலமான ஏர்லைன் நிறுவனங்கள் என்று பார்த்தால், நிச்சயம் எமிரேட்ஸ் அவற்றுள் ஒன்றாக இருக்கும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமான சேவையானது நம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் ஏர்லைன் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தும் விதமாக கூடுதலாக விமானங்களை எமிரேட்ஸ் நிறுவனம் வாங்குகின்றது.
இதில் 15 ஏர்பஸ் ஏ350-900எஸ் விமானங்கள் அடங்குகின்றன. ஏ350-900எஸ் விமானங்களை மட்டும் குறிப்பிட்டு பார்ப்பதற்கு காரணம், இவை அந்த அளவிற்கு உலகம் முழுவதும் பிரபலமானவை.
உலகின் மிகவும் மாடர்னான மற்றும் செயல்திறன்மிக்க விமானம் ஏ350 ஆகும். இத்தனைக்கும், ஏ350 விமானங்கள் நன்கு அகலமாக வடிவமைக்கப் படுகின்றன.
குறிப்பாக ரேஞ்ச் விஷயத்தில், 300 - 410 இருக்கைகளை கொண்ட விமானங்கள் பிரிவில் ஏ350 அளவிற்கு வேறெந்த விமானமும் ரேஞ்சை வழங்குவதில்லை.
சுமார் 9,700 நாட்டிக் மைல் (கிட்டத்தட்ட 18 ஆயிரம் கிமீ) தொலைவிற்கு ஏ350 விமானங்களை நான்-ஸ்டாப்பாக இயக்கி செல்ல முடியும்.
இதனால், குறுகிய தூர பயணங்களுக்கு மட்டுமின்றி, மிக நீண்ட தூர பயணங்களுக்கும் எமிரேட்ஸ் போல பல ஏர்லைன் நிறுவனங்கள் ஏ350 விமானங்களை தைரியமாக பயன்படுத்துகின்றன.
ஏ350 விமானங்களை உங்களில் நிறைய பேர் நேரில் கூட பார்த்திருப்பீர்கள். ஆனால், இது தான் ஏ350 விமானமா என்பது உங்களுக்கு தெரியாமல் போயிருக்கலாம்.
விமானத்தை பெரியதாக வடிவமைத்தால், உண்டாகும் பிரச்சனை என்ன வென்றால் விமானத்தின் எடை அதிகரித்து விடும். இதனால், என்ஜின் அதிகமாக உழைக்க வேண்டி வரும்.
அதற்கேற்ப, நிறைய எரிபொருளை என்ஜின் குடிக்கும். இந்த பிரச்சனைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக, எடை குறைவான பாகங்கள் மற்றும் நியூ ஜென்ரேஷன் என்ஜின்களை கொண்டு ஏ350 விமானங்கள் வடிவமைக்கப் படுகின்றன.
அத்துடன், ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் தொழிற்நுட்பங்களுடன் மிகவும் சிறப்பான ஏரோடைனாமிக்ஸில் ஏ350 விமானங்களை ஏர்பஸ் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக, ஏ350 விமானங்கள் 25% குறைவாக எரிபொருளை குடிக்கின்றன.
Thanks for Your Comments