ஒரே நேரத்தில் ஆன்லைனில் 4 விஷயத்தை பெற.. டிரைவிங் லைசென்ஸ் !

0

டிரைவிங் லைசென்ஸை, ஆன்லைன் & ஆஃப்லைன் என 2 வழிகளிலும் பெறலாம். இதில், ஆன்லைனில் மட்டுமே மொத்தம் 4 வகையான வசதிகள் உள்ளன.அவை என்னென்ன தெரியுமா?

ஒரே நேரத்தில் ஆன்லைனில் 4 விஷயத்தை பெற.. டிரைவிங் லைசென்ஸ் !
வாகனங்கள் வைத்திருக்கும் அனைவருமே, கட்டாயம் வைத்திருக்க வேண்டியது டிரைவிங் லைசென்ஸ் உரிமமாகும். ஆன்லைனிலேயே வீட்டிலிருந்த படியே, ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி தந்திருக்கிறது.

டிரைவிங் லைசென்ஸ் பெற்ற பிறகு, ஒரு விண்ணப்பதாரர் நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு 30 நாட்களுக்கு பிறகு பழகுநர் உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

ஓட்டுநர் உரிமத் தேர்விற்கு https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்: பிறந்த தேதி சான்று, 10ம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ், முகவரி சான்று, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் போன்றவை இதற்கு தேவைப்படும் முக்கிய ஆவணங்களாகும்.

ஆனால், ஆன்லைனில் உள்ள சிறப்பு என்ன வென்றால், மொத்தம் 4 வகையான வசதிகளை மத்திய அரசு செய்து தந்துள்ளது. டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்வதுடன், லைசென்ஸில் முகவரி மாற்றம் செய்யலாம்.

அதே போல, தொலைந்து போன உங்கள் லைசென்ஸை டூப்ளிகேட் எடுத்து கொள்ளலாம். LLR எனப்படும் Learners Licence எடுக்கவும் இந்த இணையதள வசதி பெரும் உபயோகமாக இருக்கிறது. 

இந்த 4 வசதிகளுக்கும் பெயர் Contactless Service Operation என்பதாகும். ஆஃப்லைனில் பெறுவது எப்படி: இந்த டிரைவிங் லைசென்ஸை பெற வேண்டுமானால் ஆர்டிஓ அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும். 

விரைவில் பெண்கள் கர்ப்பமாக இந்த உடற்பயிற்சியை செய்யணுமாம் !

அப்போது அடையாள சான்றுகள், வசிப்பிட சான்றுகள், குடியுரிமை சான்றுகள் போன்றவைகளுடன் அணுக வேண்டும். ஆர்டிஓ அலுவலகத்தில் தரப்படும், ஓட்டுநர் உரிம விண்ணப்ப படிவத்தை கவனமாக நிரப்ப வேண்டும். 

தேவைக்கேற்ப துல்லியமான மற்றும் முழுமையான தகவலை வழங்க வேண்டும். இறுதியில், ஓட்டுநர் உரிமத்திற்கான பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

செயல்முறைகள்: 

ஒரே நேரத்தில் ஆன்லைனில் 4 விஷயத்தை பெற.. டிரைவிங் லைசென்ஸ் !

ஓட்டுநர் சோதனைக்கேற்ற நாள் மற்றும் நேரத்தை தேர்வு செய்து திட்டமிட வேண்டும். அந்த சரியான தேதியில், நியமிக்கப்பட்ட ஆர்டிஓவில் ஓட்டுநர் சோதனையை நடத்தி காட்ட வேண்டும்.

அந்த ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றால், ஓட்டுநர் உரிமம் உங்களுக்கு வழங்கப்படும்.

உங்கள் மாநிலத்தின் ஆர்டிஓ பின்பற்றும் செயல்முறையைப் பொறுத்து, இது உடனடியாக ஆர்டிஓவிடம் ஒப்படைக்கப் படலாம் அல்லது உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப் படலாம்.

காலிஃப்ளவர் பட்டாணி குருமா செய்வது எப்படி?

தகுதிகள்: 

வாகன ஓட்டுநர் உரிமம் பெறவேண்டுமானால், 16 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 55 CC.க்கு குறைந்த, கியர் இல்லாத வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டுமே அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

55 CCக்கு அதிகமான மற்றும் 4 சக்கர வாகன (எல்.எம்.வி - இலகு ரக வாகனம்) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ஆனால், வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி எதுவும் தேவை இல்லை.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings