ஆப்பிள், போன்ற பெரிய நிறுவனங்கள் எலான் மஸ்க் பதிவு குறித்த சர்ச்சை அடங்கும் வரை ட்விட்டரில் விளம்பரம் செய்வதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளன.
எக்ஸ் என்று பெயர் மாறியுள்ள ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், அவ்வப்போது யூத வெறுப்புக் கருத்துகளைப் பதிவிடும் பயனர்களுடன் உரையாடி வருகிறார்.
எந்த பாலை எப்படி காய்ச்சுவது
இந்நிலையில், யூத மக்கள் வெள்ளையர்களின் மீது வெறுப்பு கொண்டவர்கள் என்று தெரிவிக்கும் பதிவு ஒன்றுக்கு எலான் மஸ்க், உண்மையைச் சொன்னீர்கள் என்று பதிலளித்துள்ளார்.
எலான் மஸ்க் கூறிய கருத்து வெள்ளை மாளிகையில் இருந்தும் உடனடி எதிர் வினையைப் பெற்றுள்ளது. எலான் மஸ்கின் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் யூத மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கவலை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எலான் மஸ்கின் டெஸ்லா கார் நிறுவனத்துடன் பங்குதாரர்களாக உள்ளவர்களும் மின்சார கார் தயாரிப்பாளரின் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவரும் மஸ்கிற்கு எதிராகப் பேசியுள்ளனர்.
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்துடன் பல ஒப்பந்தங்களை வைத்துள்ளன. எலான் மஸ்கின் பேச்சால் அந்த ஒப்பந்தங்கள் ஏதும் ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கால்கள் எங்கே? பாதங்கள் எங்கே? மாயத் தோற்றம் !
இச்சூழலில் ஆப்பிள், ஆரக்கிள், காம்காஸ்ட், பிராவோ நெட்வொர்க், ஐபிஎம் போன்ற பெரிய நிறுவனங்கள் எலான் மஸ்க் பதிவு குறித்த சர்ச்சை அடங்கும் வரை ட்விட்டரில் விளம்பரம் செய்வதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளன.
Thanks for Your Comments