டைம் பாஸ்க்காக ஆடிஷன்.. ரஞ்சனா நாச்சியார்.. சன் டிவியில் வாய்ப்பு !

0

பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை தாக்கியதன் மூலம் கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைதளப் பக்கங்களில் வைரல் ஆகி வருகிறார் நடிகை ரஞ்சனா நாச்சியார்.

டைம் பாஸ்க்காக ஆடிஷன்.. ரஞ்சனா நாச்சியார்..  சன் டிவியில் வாய்ப்பு !
பாஜகவில் சேர்ந்த மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில் அதற்கு முன்னரே குடும்பத் தலைவி என்ற பொறுப்பிலிருந்து நடிகை அவதாரம் எடுத்து விட்டார் ரஞ்சனா நாச்சியார். 

அதுவும் அவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பே சன் டிவியில் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. சன் தொலைக்கட்சியில் ஒளிப்பரப்பான குலதெய்வம் சீரியல் தான் ரஞ்சனா நாச்சியாரை நடிகையாக அறிமுகப் படுத்திய சீரியல். 

அதன் இயக்குநர் திருமுருகன் தான் ரஞ்சனா நாச்சியாரை தனது சீரியல் கேரக்டருக்கு தேர்வு செய்து நடிக்க வாய்ப்புக் கொடுத்தவர். 

குலதெய்வம் சீரியலை பொறுத்தவரை சன் தொலைக்காட்சியில் கடந்த 2015 முதல் 2018 வரை ஒளிப்பரப்பானது. 

டைம் பாஸ்க்காக ஆடிஷன்.. ரஞ்சனா நாச்சியார்..  சன் டிவியில் வாய்ப்பு !

இதனிடையே தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதை ரஞ்சனா நாச்சியாரே முந்தைய பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.

தாம் ஒரு முறை காரில் சென்று கொண்டிருந்த போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ள சீரியலுக்கு ஆடிஷன் நடப்பதாகவும் அதன் இயக்குநர் திருமுருகன் என விளம்பரம் பார்த்ததாகவும் கூறியுள்ளார். 

இதையடுத்து என்ன தான் நடக்கிறது எனப் பார்ப்போம் என்று அந்த ஆடிஷனில் டைம் பாஸாக தாம் கலந்து கொண்டதாகவும் கூறியுள்ள ரஞ்சனா நாச்சியார், 

தனக்கு சீரியலில் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவே இல்லை எனவும் கடைசியில் பார்த்தால் குலதெய்வம் சீரியலில் தனக்கு ஸ்ட்ராங் ஆன கேரக்டரை இயக்குநர் திருமுருகன் கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

டைம் பாஸ்க்காக ஆடிஷன்.. ரஞ்சனா நாச்சியார்..  சன் டிவியில் வாய்ப்பு !

மொத்தத்தில் டைம் பாஸ்ஸுக்காக ஆடிஷன் அட்டெண்ட் செய்யப் போய் நடிகையாகும் வாய்ப்பு கிடைத்ததாக ரஞ்சனா நாயர் தனது முந்தைய பேட்டிகளில் கூறியுள்ளார். 

தன்னை பொறுத்தவரை பள்ளியில் நன்றாக படிக்கக் கூடிய நபர் என்பதால் டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆவோம் என்று தான் நினைத்ததாகவும் எதிர்பாராத விதமாக நடிக்க வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

அரசியலிலும், சினிமாவிலும், சீரியலிலும் கிடைக்காத பிரபலம் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை அடித்ததன் மூலம் கிடைத்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings