பொதுவாகவே வீட்டில் புறா, சிட்டுக்குருவி போன்றவை கூடு கட்டுவது இயல்பான ஒன்று தான். பெரும்பாலான விலங்குகள் மற்றும் பறவைகள் தெய்வங்களின் வாகனங்களாக கருதப்படுகிறது.
எனவே பலரும் பறவைகள் மற்றும் விலங்குகளும் தெய்வங்களுடன் சேர்த்தே வழிபாடு செய்கின்றனர்.
பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது ஏன்?
ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சில பறவைகள் வீட்டில் கூடு கட்டுவது அதிஷ்டமாகவும் சில பறவைகள் கூடு கட்டுவது அமங்களமாகவும் பார்க்கப் படுகின்றது.
அந்த வகையில் வீட்டில் புறா கூடு கட்டினால் என்ன பலன் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
புறாக்கள் லட்சுமி தேவிக்கு உகந்த பறவை என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே புறாக்கள் வீட்டிற்கு வருவதால், அது துரதிர்ஷ்டத்தை அதிர்ஷ்டமாக மாற்றுவதாகவே கருதப் படுகின்றது.
பறவைகளின் வருகை வாழ்க்கையின் அதிர்ஷ்டம் அதிகரிக்கப் போவதை குறிக்கிறது. புறாவிற்கு கூரைகளில் உணவளிக்காமல் வீட்டின் முற்றத்தில் உணவளிக்க வேண்டும்.
இது ராகு கிரக தோஷத்தை நீக்குகிறது. ஆனால் அதே நேரம் புறா எச்சங்களை சுத்தம் செய்யப்படா விட்டால், ராகு கிரகத்தின் எதிர்மறையான விளைவுகளை செயல்படுத்தலாம். எனவே அதனை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.
உங்கள் குழந்தையோடு வெளிநாடு போறீங்களா?
வாஸ்து படி, உங்கள் தலைக்கு மேல் புறா பறந்தால், உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் என்று அர்த்தம்.
வெளியே செல்லும் போது திடீரென உங்கள் வலது பக்கத்திலிருந்து புறா பறந்தால், அந்த நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அது துரதிர்ஷ்டம் என்று அர்த்தம்.
புறாக்களை அவமதிப்பது வீடு தேடி வந்த செல்வத்தை புறக்கணிப்பதை போன்றது. அதனால் தான் வீடுகளில் புறா கூடு கட்டுவது மங்களகரமானது என கருதப் படுகிறது.
அதே போல், புறா கூடு கட்டும் வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும் என்பது நம்பிக்கை. எனவே புறா கூட்டை ஒரு போதும் கலைக்க கூடாது.
புறா கூடு கட்டுவது இருக்கட்டும் மொதல்ல புறா வளக்காதீங்க.
ReplyDelete