அமலாகிறது பொது சிவில் சட்டம்.. லிவிங் டுகெதர் சிக்கல் !

0

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அமலாகிறது பொது சிவில் சட்டம்.. லிவிங் டுகெதர் சிக்கல் !
அங்கு ஆட்சியை தக்க வைத்ததைத் தொடர்ந்து, பொது சிவில் சட்டம் குறித்து ஆராய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சன் தேசாய் தலைமையில் குழு ஒன்றை முதல்வர் புஷ்கர் சிங் தாமி அமைத்தார்.

இந்த குழு பொது சிவில் சட்டம் குறித்த வரைவு அறிக்கையை பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு தயாரித்துள்ளது. ஓரிரு நாளில் இந்த அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

இது தொடர்பாக அம்மாநில அரசு வட்டாரங்கள் கூறுகையில், ரஞ்சன் தேசாய் அறிக்கை அளித்த பிறகு, சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரை கூட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 

அதில், பொது சிவில் சட்டம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அதனைத் தொடர்ந்து அந்த சட்டம் அமல்படுத்தப்படும். 

(getCard) #type=(post) #title=(You might Like)

அந்த வரைவு அறிக்கையில், பலதார திருமணங்களை தடை செய்யவும், லிவ் இன் முறையில் வசிக்கும் தம்பதிகள் பதிவு செய்வதை கட்டாய மாக்கவும், பரம்பரை சொத்தில் மகன் மற்றும் மகளுக்கு சம உரிமை அளிக்கவும் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது என்று தெரிவித்தன.

இந்த சட்டம் அமலுக்கு வந்தால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் என்ற பெருமை உத்தரகாண்டிற்கு கிடைக்கும். 

இம்மாநிலத்தை தொடர்ந்து மக்களவைத் தேர்தலுக்கு முன்னர், குஜராத் மாநிலமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings