கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் காதலை முறித்த ஆத்திரத்தில் என்ஜினீயரிங் மாணவியை மலைக்கு அழைத்து சென்ற காதலன் அவரை கொலை செய்திருக்கிறார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு தலை காதல் தறுதலைக் காதலாக பல நேரங்களில் மாறுகிறது.
அதே நேரம் காதலித்த பெண் வேண்டாம் என்று பிரிந்து சென்றால், அவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக வாழட்டும் என்ற பக்குவம் பலருக்கும் இல்லை.
காதல் தோல்வி அடைந்தால் நீயும் சாவு, நானும் சாகிறேன் என்ற கொடூர எண்ணத்துடன் பலர் இருக்கிறார்கள். அதே போல் எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என்று நினைக்கும் மோசமான இளைஞர்கள் அதிகமாக உள்ளனர்.
காதலை முறித்த ஆத்திரத்தில் என்ஜினீயரிங் மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார் காதலன். கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா கவலாகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதாகும் சுசித்ரா. இவர், மொசலேஹொச ஹள்ளி கிராமத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் 3ம் ஆண்டு பயின்று வந்தார்.
இவரும், அதே கல்லூரியில் படித்து தற்போது என்ஜினீயராக பணியாற்றி வரும் தேஜஸ்(23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். சுசித்ர தன்னுடய சீனியர் மாணவரை காதலித்துள்ளார்.
சுசித்ரா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக தேஜஸுடன் பேசுவதை குறைத்துக் கொண்டுள்ளார்- ஒரு கட்டத்தில் இவர்களது காதல் திடீரென முறிந்தது.
சுசித்ரா தான் காதலை முறித்து கொண்டிருக்கிறர் தேஜசுடன் பேசுவதை சுசித்ரா முற்றிலும் நிறுத்தினார்.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலையில் சுசித்ராவை சந்தித்த தேஜஸ், அவரை குந்திகுட்டா மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று சமாதானம் பேசிக்கொண்டிருந்தார்.
அங்கு இருவரும் காதல் முறிந்த விவகாரம் குறித்து பேசிய நிலையில், காதல் முறிந்ததை திட்டவட்டமாக சுசித்ரா கூறியுள்ளார.
இதனால் ஆத்திரம் அடைந்த தேஜஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுசித்ராவின் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்றுள்ளார். அதன் பின்னர் தேஜஸ் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார்.
இதைப் பார்த்த அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து ஹாசன் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சுசித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தேஜசை தேடிப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கர்நாடாகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Thanks for Your Comments