மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம்.
இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்புகளில், அதாவது ப்ரீ வெட்டிங் ஷூட்டில் (Pre Wedding Shoot) வித்தியாசமான க்ரேஸ் காணப்படுகிறது.
குளிர் காலத்தில் வரும் இருமலுக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் !
இப்போதெல்லாம் பெரும்பாலான தம்பதிகள் திருமணத்திற்கு முந்தைய ஷூட்களை செய்கிறார்கள். திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்புகளுக்கு வெவ்வேறு இடங்களை தேர்வு செய்கிறார்கள்.
சிலர் மாளிகைகளிலும், கோட்டைகளிலும், சிலர் கடற்கரையிலும் படமெடுக்க விரும்புகிறார்கள். இவற்றின் பல வீடியோக்களையும் நாம் சமூக ஊடகங்களில் பார்த்துள்ளோம்.
இருப்பினும், சமீபத்தில் வெளியான ஒரு ப்ரீ வெட்டிங் ஷுட்டின் வீடியோ மிகவும் வித்தியாசமாக உள்ளது.
ஆம், மக்கள் உடற்பயிற்சி செய்யச் செல்லும் ஜிம் தான் அவரது ப்ரீ வெட்டிங்க் ஷுட்டிற்கான டெஸ்டினெஷன். இந்த வித்தியாசமான ப்ரீ வெட்டிங் ஷுட் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப் படுகிறது.
அந்த பெண் சேலை அணிந்து மணமகளை போல போல் முழு அலங்காரத்துடன் இருப்பதை வீடியோவில் நாம் காண முடிகின்றது. ப்ரீ வெட்டிங்க் ஷுட்டை ஜிம்மில் செய்ய மணப்பெண் போல் அவர் உடையணிந்து வந்துள்ளார்.
வீடியோவில், பெண் டம்பெல்ஸ் தூக்கி உடற்பயிற்சி செய்வதை காணலாம். அந்தப் பெண் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, ஒரு புகைப்படக்காரர் அவரைப் படம் எடுக்கிறார்.
ஜிம்மில் நடந்த ப்ரீ வெட்டிங் ஷூட்டை பார்த்து அங்கிருந்தவர்கள் மிகவும் ஆச்சரிய மடைந்துள்ளனர். உடற்பயிற்சின் மீது ஆர்வம் உள்ள பலர் பல மணி நேரம் ஜிம்மில் கழிப்பதை நாம் பார்த்துள்ளோம்.
அது போதாதென்று அவர் அங்கு ப்ரீ வெட்டிங் ஷுட் வேறு செய்தது மற்றவர்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.
இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பிற்கு பெண் ஏன் இந்த இடத்தை தேர்வு செய்தார் என்று சமூக ஊடகங்களில் உள்ளவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த வீடியோ சமூக ஊடக தளமான எக்ஸ் -இல் HasnaZarooriHai என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
புளித்த ஏப்பம் வயிற்று பிரச்னையின் அறிகுறி தெரியுமா? #Alert
இணையவாசிகள் (Netizens) இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். சிலர் அந்த பெண்ணுக்கு ஃபிட்னஸ் மீது உள்ள பற்றை பாராட்டியுள்ளார்கள்.
ஆனால் சிலரோ இது வெறும் கவன ஈர்ப்பு செயல் என விமர்சித்துள்ளனர். 'யாரை பற்றியும் கவலைப்படாமல் தனக்கு பிடித்ததை செய்யும் அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள்' என ஒரு பயனர் எழுதியுள்ளார்.
இதெல்லாம் சமூக ஊடகங்களில் டிரெண்டாக செய்யப்படும் வீண் கவன ஈர்ப்பு விஷயங்கள்' என மற்றொருவர் விமர்சித்துள்ளார்.
वैसे भी शादी से डर लगता है और ऐसा प्री वेडिंग शूट देखकर तो आत्मा कांप गई 😂 pic.twitter.com/wN4FrN0NiU
— HasnaZarooriHai🇮🇳 (@HasnaZaruriHai) November 15, 2023
Thanks for Your Comments