நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை 700க்கும் அதிகமான ரன்களை குவித்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார் விராட் கோலி.
சச்சின் டெண்டுல்கரின் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகச் சதங்கள் (50 வது) அடித்த சாதனையை முறியடித்தது இன்னும் அடுத்த 10 ஆண்டுகளுக்குக் கிரிக்கெட் ரசிகர்கள் பேசுவார்கள்.
விராட் கோலி முதல் முறையாகச் சர்வதேச அளவில் 2008ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடியது மூலம் இந்திய அணிக்காகத் தனது பயணத்தைத் துவங்கினார்.
இவர் ஆட துவங்கிய காலத்தில் சச்சின் முதல் தோனி வரையில் அனைத்து பெரிய ஸ்டார்களும் இருந்த காரணத்தால் ஆரம்பத்திலேயே பிட்னஸ் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்தார்.
விராட் கோலியின் பிட்னஸ் மேம்பட மேம்பட அவருடைய ஆட்டமும் சிறப்பானதாக மாறியது, இதே வேளையில் இந்திய அணியில் புதிய ஸ்டாராக அவதாரம் எடுத்தார்.
ஓட்டல்களில் உணவு ருசியாக இருக்க காரணம் !
மேலும் பிராண்டிங் விளம்பரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி முதல் முறையாக 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பை எட்டிய போது விளையாட்டு, பிட்னஸ், விளம்பரம், முதலீடு என அனைத்திலும் படு சீரியஸாக மாறினார்.
2008 ஆம் ஆண்டு 19 வயதில் சர்வதேச கிரிக்கெட் ஆட துவங்கி இன்று உலகிளவில் பெஸ்ட் கிரிக்கெட்டர் என்போதோடு, உலகின் டாப் ஸ்போர்ட்ஸ் செலிப்பிரிட்டாயாக உயர்ந்துள்ளார்.
2015க்கு பின்பு தன்னை ஒரு பிராண்டாக மாற்றிக் கொள்ள விரும்பிய விராட் கோலி டாப் பிராண்டுகள் உடன் மட்டுமே பணியாற்றினார்.
இதன் பின்பு சச்சின், தோனி, யுவராஜ் ஆகியோரை பார்த்துப் பிஸ்னஸ், முதலீடு எனக் களத்தில் குதித்தார். இப்படி 'கிங் கோலி' தனது பணத்தை எங்கெல்லாம் முதலீடு செய்கிறார்.
இவர் முதலீடு செய்துள்ள ஸ்டார்ட்அப் பட்டியலை பார்ப்போம் வாங்க. ரேஜ் காபி - டெல்லியைச் சேர்ந்த காபி பிராண்ட் மார்ச் 2022 இல் விராட் கோலியிடம் இருந்து வெளியிடப்படாத தொகையை முதலீடாகப் பெற்றுள்ளது.
ஸ்போர்ட்ஸ் கான்வோ - விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் லண்டனைத் தளமாகக் கொண்ட ஒரு சமூக ஊடக ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் விராட் கோலி தனது 26 வயதில் முதலீடு செய்தார்.
யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்பிஸ் - இது ஒரு ஃபேஷன் ஸ்டார்ட்அப், விராட் கோலியைப் பிரதிநிதித்துவப் படுத்திக் கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட்ஸ் எல்எல்பி நிறுவனம் சுமார் ரூ.19.3 கோடி முதலீட்டை செய்தது.
Galactus Funware Technology - பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விராட் கோலியிடமிருந்து கடனீட்டுப் பத்திரங்கள் வாயிலாக 33.42 லட்சம் ரூபாய் அளவிலான முதலீட்டை பெற்றது.
Digit - புனேவை தளமாகக் கொண்ட இன்சூரன்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான Digit-ல விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா 2.5 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
உணவு வீணாவதை எவ்வாறெல்லாம் தவிர்க்கலாம்?
ஹைபரிஸ் (Hyperice) - ஒரு ஆரோக்கியம் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், விராட் கோலி வெளியிடப்படாத தொகையை முதலீடு செய்தது மூலம் இந்நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத் தாண்டி விராட் கோலி சொந்தமாக One8 Commune என்ற ரெஸ்ட்ரோபார்கள், Nueva என்ற பார் அண்ட் ரெஸ்டாரென்ட்,
Puma One8 என்ற ஸ்போர்ட்ஸ்வியர் பிராண்ட், Wrogn மற்றும் Stepathlon Kids ஆடை பிராண்டுகளிலும் முக்கியப் பங்கு வகித்து வருகிறார். இவை அனைத்தையும் தாண்டி வருடம் 7 கோடி ரூபாயை கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் சம்பளமாகப் பெறுகிறார்.
மேலும் சுமார் 30க்கும் அதிகமான பிராண்டுக்களுக்கு அம்பாசிட்டராக இருக்கும் விராட் கோலி ஒரு நாள் விளம்பர சூட்டிங் செய்ய 10 கோடி ரூபாய் வசூலிக்கிறார்.
தயிருடன் சில உணவுகளை உண்ணக்கூடாது ஏன்?
இவருக்கு 120 கோடி ரூபாய் மதிப்பிலான ரியல் எஸ்டேட் சொத்துக்களை மும்பை மற்றும் கூர்கான் பகுதியில் வைத்துள்ளார். மேலும் 31 கோடி ரூபாய் மதிப்பிலான கார்களை வைத்துள்ளார்.
இவை அனைத்திற்கும் துவக்கம் பிட்னஸ் மூலம் அவர் சம்பாதித்த முதல் 100 கோடி ரூபாய்.
Thanks for Your Comments