புத்தம் புதிய கார்களை வாங்குவதற்கு எவ்வாறு ஓர் கூட்டம் உள்ளதோ அதே போன்று, பழைய கார்களை வாங்குவதற்கும் ஓர் பெரிய கூட்டம் உள்ளது.
காருக்கு வாரண்டி கொடுப்பார்கள் மற்றும் காரின் விலையும் அன்றைய மார்க்கெட் விலையில் இருக்கும். ஆனால், செகண்ட் ஹேண்டில் கார் வாங்கும் போது நிறைய விஷயங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
சரோகசி ( Surrogacy ) என்றால் என்ன ?
நம்மில் சிலர் குறைந்த விலையில் கிடைக்கிறதே என டாக்ஸி, டெலிவிரி சர்வீஸ் உள்ளிட்ட கமர்ஷியல் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவர்.
பொதுவாகவே, கமர்ஷியல் வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் கார்கள் குறுகிய காலத்திலேயே நன்கு அடித்து கிழிக்கப் பட்டிருக்கும்.
இதனால், எதிர்காலத்தில் பழுது பார்ப்பு செலவுகள் அதிகமாக ஏற்படலாம் என்பது ஓர் பிரச்சனை என்றால், அதே போன்று செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை பிரைவேட் காராக ஆர்டிஓ-இல் மறுபதிவு செய்வதும் சற்று சிரமமான காரியமாக உள்ளது.
இவ்வாறு வாங்கப்படும் காரை பிரைவேட் காராக மாற்றுவதற்கு முன்னர், முதலில் அந்த காரின் கமர்ஷியல் டேக்-ஐ நீக்க வேண்டியது அவசியம்.
இதற்கு நீங்கள், அருகில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் ஓர் விண்ணப்பத்தை வழங்க வேண்டியதாக இருக்கும்.
இந்த விண்ணப்பத்தில், எதற்காக காரை கமர்ஷியலில் இருந்து பிரைவேட் வாகனமாக மாற்றுக்கிறீர்கள் என்பதற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட வேண்டியது முக்கியம்.
அத்துடன், ஒரிஜினல் வாகன பதிவு சான்றிதழ், இன்ஸ்சூரன்ஸ் ஐடி மற்றும் முகவரி ஆதாரம் உள்ளிட்டவையும் அந்த விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
பெண்கள் பருவமடைவது என்பது !
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, கமர்ஷியல் வேலைகளுக்கு பயன்படுத்து வதற்கான அனுமதி மற்றும் அதன்பின் அது நீக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையிலான விண்ணப்பத்தையும் உடன் இணைக்க வேண்டும்.
கமர்ஷியல் வாகன உரிமை ரத்து செய்யப்பட்ட பின், உங்களால் அந்த காரை பிரைவேட் வாகனமாக பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.
ஒருவரிடம் இருந்து ஒரு காரை வாங்கிய பின் அதனை தனது பெயரில் மாற்றிக் கொள்வதற்காக பின்பற்றப்படும் வழக்கமான அதே முறைகளையே இதன் பின்னர் கடைப்பிடிக்க வேண்டி இருக்கும்.
இந்த மறு வாகன பதிவுக்கு நீங்கள் சாலை வரி கட்டணத்தை செலுத்த வேண்டி வரும்.
குழந்தை பிறந்த பின் உடற்பயிற்சி அவசியம் !
அத்துடன், உங்களது அடையாள அட்டை, முகவரி ஆதாரம், பேன் கார்டு, ஆர்டிஓ-இன் நோ அப்ஜக்ஷன் சான்றிதழ், முந்தைய வாகன உரிமை நீக்கப்பட்டதை உறுதி செய்யும் சான்றிதழ் மற்றும் விண்ணப்பம் 20 உள்ளிட்ட ஆவணங்களையும் ஆர்டிஓ-இல் சமர்பிக்க வேண்டும்.
Thanks for Your Comments