ஐரோப்பிய மற்றும் இந்திய நிறுவன கார்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?

0

இந்தியாவில் ஆசிய நிறுவனங்களின் கார்கள் விலைக் குறைவு. அதே போல் ஐரோப்பாவில் அந்த நாட்டு கார்களில் விலையும் குறைவு. ஜெர்மனில் ஆடி, ஸ்கோடா, போக்ஸ்வேகன் கார்கள் விலையும் குறைவு தான். 

ஐரோப்பிய மற்றும் இந்திய நிறுவன கார்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?
ஐரோப்பிய கார் நிறுவனங்களை விலைக்கு வாங்குவது இந்திய கார் நிறுவனங்கள் தான். இந்திய கார் நிறுவனங்கள் ஐரோப்பிய கார் நிறுவனங்களை விட பொருளாதார சக்தி வாய்ந்தவை.

ஐரோப்பிய நிறுவன கார்கள் உயர்ந்தவை என்ற எண்ணம் இந்தியர்களின் மனதில் ஆழமாக ஊன்றி யுள்ளதால் அந்த கார்களின் விலையும் அதிகமாக வைத்துள்ளனர். 

ஐரோப்பிய கார்கள் உதிரி பாகங்கள் இந்தியாவிலிருந்து ஐரோப்பா சென்று அங்கிருந்து இந்தியா மீண்டும் வந்து இங்குள்ள அசெம்பிளி யூனிட்களில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை ஆகிறது. 

உதிரி பாகங்களோ கார்களோ ஊரை சுற்றி வருவதால் விலையும் அதிகமாக தான் உள்ளது. 10 வருடங்களுக்கு முன் ஐரோப்பிய கார்கள் மட்டும் தரமாகவும் பாதுகாப்பு அம்சமும் கொண்டதாக இருந்தது. 

காரில் பிரேக் பிடிக்காமல் போனால் செய்ய வேண்டியது என்ன?

ஆனால், தற்போது இந்திய நிறுவனங்கள் தரத்திலும், பாதுகாப்பிலும் ஐரோப்பிய நிறுவனங்களை மிஞ்சி விட்டன .

மாருதி, டாடா, மஹிந்திரா போன்ற இந்திய பிராண்ட்கள் முன்பு விலை மலிவான கார்களையே உற்பத்தி செய்தன. ஆனால், இன்றோ டாடாவும், மஹிந்திராவும் பிரிமியம் கார்களை உற்பத்தி செய்கின்றன. 

டாடாவின் பாடிபில்டிங், பாதுகாப்பு அம்சங்கள் ஐரோப்பிய கார் நிறுவனங்களை மிஞ்சி தான் உள்ளது. மஹிந்திரா எப்போதுமே ஒரு கெத்தாகவே நிற்கும்.

தற்போது மஹிந்திரா 700 வெர்சன் முன் ஐரோப்பிய கார்கள் மண்டியிட தான் வேண்டும். டாடாவும், மஹிந்திரா விலை அதிகம் கொண்ட கார்களை தயாரிக்க ஆரம்பித்ததால் ரெனால்ட் போன்ற ஐரோப்பிய நிறுவனங்கள் மலிவு விலையில் கடை விரிக்கின்றன. 

ஐரோப்பிய மற்றும் இந்திய நிறுவன கார்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?
ரெனால்ட் நிறுவனத்தின் டிரிக்கர் கார் ₹7 லட்சத்திலிருந்து ஆரம்பமாகிறது. இந்த காரில் அனைத்து வசதிகள் இருந்தாலும் 7 பேர் பயணிக்கவும் முடியும். 

இதே வகையில் டாடா, மஹிந்திரா கார்களை வாங்க ₹10 லட்சத்தை தாண்டி செல்கிறது. நிறைய அலசும் முன் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியா கார்கள் நீண்ட காலம் உபயோகிக்க முடியும். 

முன்னோர்கள் அதற்கு வயாகராவாக பயன்படுத்திய உணவு தெரியுமா?

மறுவிற்பனை செய்தாலும் நல்ல விலைக்கு விற்க முடியும். ₹7 லட்சத்திற்கு வாங்கிய மாருதி காரை 10 வருடம் கழித்து ₹3 லட்சத்திற்கு விற்க முடியும். அதன் பரமரிப்பு செலவுகள் மிகக்குறைவு. 

₹40 லட்சத்திற்கு ஆடி, பி.எம்.டபிள்யூ, பென்ஸ் கார்கள் வாங்கினாலும் 10 வருடம் ஆகிவிட்டால் ₹5–8 லட்சம் வரை விலை போகும். பரமரிக்கவும் முடியாது. முக்கியமாக சர்வீஸ் சார்ஜ்கள் கதற வைத்து விடும். மறு விற்பனை மதிப்பும் மிகக் குறைவு.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings