பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தில் ரூப்நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது.
தனக்கு அடிபட்டிருக்கிறது என்று சிகிச்சை பெற வந்துள்ளார். ஆனால் அவருக்கு மருத்துவர் அஜித் பஸ்வான், சிகிச்சை அளிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்றே ஆக வேண்டும் என்று ரெளடி இருக்க, முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார் மருத்துவர். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆரோக்கியமற்ற உணவுகள் யாவை?
இந்த வாக்குவாதம் இருவருக்குள்ளும் கைகலப்பாக மாறவே, மருத்துவரும் அந்த ரெளடியை தாக்கியுள்ளார். அதோடு மருத்துவமனை ஊழியர்களும் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ரெளடி சந்தன்குமார் மயங்கி கிடந்துள்ளார். பின்னர் அவர் எழுந்திருக்க வில்லை என்பதால் அவரை பரிசோதனை செய்யும் போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த அவர்கள் உயிரிழந்த ரெளடி சந்தன்குமாரின் கூட்டாளிகள் 6 பேரை கைது செய்தனர்.
மிக்ஸ்டு ஃப்ரூட் தோசை செய்வது எப்படி?
மேலும், ரவுடியை அடித்துக் கொன்று விட்டு தலைமறைவாக இருக்கும் மருத்துவர் அஜித் மற்றும் மருத்துவமனை ஊழியரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிகிச்சை பெற வந்த ரெளடியை அடித்தே கொன்ற மருத்துவரின் செயல் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments