பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத 17லிருந்து நவம்பர் மாத 15 ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.
முன்னோர்களை பித்ருக்கள் என்று சொல்லுவோம். நம் குடும்பத்தில் இறந்து விட்ட முன்னோர்களை தொடர்ந்து வழிபடச் சொல்லி வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரம்.
ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன என்றும் இந்த நாளில், மறக்காமல் முன்னோர்களை வணங்க வேண்டும் என்றும்,
அவர்களுக்கு தர்ப்பணம் முதலான காரியங்களைச் செய்ய வேண்டும் எனவும் நமது வீட்டு பெரியவர்கள் நமக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.
பன்றி கொழுப்பு அனைத்து உணவுகளிளும் சேர்க்கப் பட்டுள்ளது எச்சரிக்கை !
செய்யக் கூடியவைகள் . :
தர்ப்பணம் முதலான சடங்கு சாங்கியங்களைச் செய்வதும் நல்லது. அத்துடன் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து முன்னோர் படங்களுக்கு நமஸ்கரித்து பிரார்த்தனை செய்வது நல்லது.
முடிந்தால், அன்றைய தினம் நம் முன்னோர்களை நினைத்து, அருகில் உள்ள ஏழை எளியோருக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுப்பது, உணவு அளிப்பது என தான தர்மங்கள் செய்தால் முன்னோர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கப் பெறும் என்பது நம்பிக்கை.
தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பது ஆணுக்கு சில நாட்கள், பெண்ணுக்கு வேறு சில நாட்கள். அதில்லாமல் சஷ்டி, கிருத்திகை, அமாவாசை, பவுர்ணமி போன்று பல நிபந்தனைகள் உள்ளன.
சில நாட்களில் குளிக்கலாம், சில நாட்களில் குளிக்கக்கூடாது. ஆணும், பெண்ணும் ஒரே நாளில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. தீபாவளி அன்று மட்டும் தான் அனைவரும் ஒரே நாளில் தலைக்கு குளிக்கலாம்.
பன்றி இறைச்சி ஹராம் ஏன்?
அன்றைக்கு எந்த நட்சத்திரம், கிழமை என்று எதுவும் பார்க்கத் தேவையில்லை. தீபாவளி என்கிற ஒன்று. அவ்வளவே. அது தான் தீபாவளி சிறப்பு. குடும்பத்துடன் ஒன்றாக சேர்த்து இருப்பதே அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே நடக்கும். நினைத்துப் பாருங்கள்.
பேருந்து ஓட்டுனர்கள் அனைவரையும் அவரவர் சொந்த ஊருக்கு போக கண் விழித்து கடமைகளை செய்கின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் இருக்க முடியுமா? சநதேகமே.
இப்படியே ராணுவ வீரர்கள், ரயில் என்ஜின் ஓட்டுநர்கள், விமான ஓட்டுனர்கள் போன்ற பல முக்கியமான வேலைகளில் இருப்பவர்கள், பணம் நிறைய சம்பாதிக்கிறார்கள்.
தீபாவளியன்று மாலையில் அனைத்து கதவுகளையும் திறந்து வைக்க வேண்டும் என்று வீட்டின் பெரியவர்கள் அடிக்கடி அறிவுறுத்துகிறார்கள்.
அன்று லக்ஷ்மி வழிபாடு நடைபெறும் நாள், லட்சுமி வருவதற்கு கதவுகள் திறந்திருக்க வேண்டும் என்பது நம்பிக்கை. பொதுவாக வீட்டில் பல்லியைக் கண்டாலே மக்கள் பயப்படுவார்கள்.
ஆனால் பயமுறுத்தும் பல்லி தான் பலவிதமான நல்ல பலன்களைத் தருகிறது என்பது அவர்களுக்கு தெரியாது. பல்லி மூலம் லட்சுமியின் ஆசியை தீபாவளி அன்று பெற்றால், அது மங்களகரமானது.
தீபாவளியன்று பல்லியை யாரேனும் வலம் வருவதைக் கண்டால், லட்சுமி தேவி நம் மேல் வாசம் செய்வதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
வீட்டில் பல்லி நல்லதல்ல என்று மக்கள் கூறினாலும், தீபாவளியன்று பல்லியைக் கண்டால் அது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
நம்பிக்கைகளின்படி, பல்லியின் பார்வை பணக் கட்டுப்பாடுகளை நீக்குகிறது மற்றும் வருமானத்தை அதிகரித்து, அதிக பணத்தை கொண்டு வருகிறது.
செய்யக் கூடாதது . :
ஆனால் அப்படி செய்வது நல்லதல்ல என்று ஆச்சாரிய பெருமக்கள் கூறுகின்றனர். அமாவாசை எப்போது வந்தாலும் சரி, சுத்தமாக குளித்து விட்டு நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்பணங்கள் வழிபாடுகள் என அனைத்தையும் செய்திட வேண்டும்.
நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது ஏன்? எதற்கு?
அசைவம் சாப்பிடக் கூடாது. கோலமிடுதலும் கூடாது. அமாவாசைக்கு மறுநாள் அல்லது முதல் நாளே அசைவம் சாப்பிட்டுக் கொள்ளலாம். இந்த வருடம் அமாவாசை திதி, தீபாவளி அன்று மதியம் ஆரம்பித்து அடுத்தநாள் முடிவடைகிறது.
அதனால் அசைவம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அப்படி சாப்பிடுபவர்கள் திதி ஆரம்பிக்கும் முன்பே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள்.
Thanks for Your Comments