கோவையில் குழந்தைக்காக ஆர்டர் செய்த உணவில் புகையிலை போதை பொருள் (கூல் லிப்) இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இது உடல் உபாதைகளை கடந்து சில நேரங்களில் உயிரையும் கூட பறித்திருக்கிறது. ஷவர்மா சாப்பிட்டவருக்கு வாந்தி மயக்கம், பிரியாணி சாப்பிட்டவர் பரிதாப பலி என தொடர்ச்சியான செய்திகள் ஓட்டல் உணவுகள் குறித்த அச்சத்தை தீவிரப் படுத்தியுள்ளன.
இந்நிலையில் இந்த வரிசையில் மற்றொரு சம்பவமும் அரங்கேற்றி யுள்ளது. அதாவது கோவையின் கவுன்டம்பாளையம் பகுதியில் சாய்பாபா காலணியில் கோவை கீதா எனும் ஓட்டல் செயல்பட்டு வருகிறது.
பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் சுவாரஸ்யமான அழகு கலாச்சாரம் !
ஒட்டு மொத்த கோவையில் உள்ள சில நல்ல ஓட்டல்களில் இதுவும் ஒன்று என சொல்லப் படுகிறது. இப்படி இருக்கையில் இன்று மதியம் இதே பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்த ஓட்டலில் உணவை ஆர்டர் செய்திருக்கிறார்.
வீட்டில் உள்ள குழந்தைக்கு கார்னை ஊட்ட தொடங்கிய அப்பெண் சிறிது நேரத்தில் கடும் அதிர்ச்சி யடைந்துள்ளார். காரணம் பேபி கார்ன் உணவில் வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாக ஏதோ இருந்திருக்கிறது.
அதை எடுத்து பார்த்த போது தான் கூல் லிப் எனப்படும் தடை செய்யப்பட்ட போதை பொருள் என்பது தெரிய வந்திருக்கிறது.
உடனடியாக குழந்தையை மருத்துவ மனையில் அனுமதித்த அவர், இது தொடர்பாக வீடியோவை பதிவு செய்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகாரையும் அனுப்பியுள்ளார்.
கூல் லிப் விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதனை யடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த கோவையையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ஒரு பக்கம் உணவின் தரம் பிரச்சனை எனில் மறுபக்கம் தடை செய்யப்பட்ட போதை பொருள் எப்படி உணவில் வந்தது என்பது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
கடந்த ஆண்டு பெரியநாயக்கன்பாளையம் அருகே சுமார் 16 கிலோ அளவுக்கு போதை சால்லேட்டுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது.
ஆகே போதை சாக்லேட்டே தடையின்றி கிடைக்கும் நிலையில், கூல் லிப் எப்படி கிடைக்காமல் இருக்கும்? என்கிற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.
வரலாற்றில் 200 மில்லியன் மக்களை கொன்று குவித்த தொற்றுநோய் தெரியுமா?
குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கூல் லிப் போன்ற போதை பொருட்கள் அதிகம் கிடைப்பதாகவும் சொல்லப் படுகிறது. இப்படி தான் ஆர்டர் செய்யப்பட்ட உணவிலும் கூல் லிப் வந்திருக்கும் என்றும் சந்தேகிக்கப் படுகிறது.
எனவே இந்த போதை பொருட்கள் தடை செய்யப் பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
Thanks for Your Comments