இஸ்ரேல் அரசு விதித்திருந்த 24 மணி நேர காலக்கெடு முடிவடைந்து விட்டது. 24 மணி நேரத்தில் 11 லட்சம் மக்களை வடக்குப் பகுதியிலிருந்து வெளியேற சொன்னது இஸ்ரேல் அரசு.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் தெற்குப் பக்கம் சென்று விடுங்கள் என அறிவித்தார் இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோ காலண்ட்.
இஸ்ரேல் அரசு விதித்திருந்த காலக்கெடுவுக்குள் பாதிக்கப்பட்ட மக்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்றுவது இயலாத காரியம் என ஐநா அறிவித்தது.
ஐநா அதிகாரியான மார்ட்டின் கிரிஃப்த்திஸ் 'காஸாவில் இருக்கக் கூடிய மக்களின் கயிறு இறுகிக் கொண்டிருக்கிறது.
மக்கள் அதிகம் வாழக்கூடிய போர்ப் பகுதியிலிருந்து எப்படி 11 லட்சம் மக்களை 24 மணி நேரத்தில் வெளியேற்ற முடியும்?' என வெளிப்படையாகவே அறிவித்தார்.
நித்யானந்தா சிஷ்யைகள் வெளியிட்ட வீடியோ.. பயமா இருக்கு !
காஸாவைப் பற்றியும் இங்கிருக்கும் மக்களைப் பற்றியும் யாருக்கும் அக்கறையில்லை. நாங்கள் இறக்கப் போகிறோம் என்பது முடிவாகி விட்டதால், வீட்டிலேயே இறந்து கொள்கிறோம்.
வடக்கோ தெற்கோ எங்கு சென்றாலும் கொல்லப் படத்தானே போகிறோம். எங்கள் உரிமைக்காக போராடியபடி, நெஞ்சை உயர்த்தி, எங்கள் நம்பிக்கையுடன் எங்கள் மண்ணிலேயே இறந்து விடுகிறோம் என பேட்டிய ளித்திருக்கிறார்.
காஸாவில் வாழும் ஸ்காட்லாந்து செவிலியரான எலிசபெத் எல் நக்லா, இது குறித்து கூறுகையில், இதுவே என் கடைசி வீடியோவாக இருக்கும். நாங்கள் இருக்கும் மருத்துவமனை நோக்கி பல்வேறு இடங்களிலிருந்து காஸா மக்கள் வருகிறார்கள்.
இந்த மருத்துவ மனையில் இருக்கும் யாரையும் எங்களால் எங்கேயும் கூட்டிச் செல்ல முடியாது. மனிதம் எங்கே இருக்கிறது?
உலகையே திரும்பி பார்க்க வைத்த ரயில் கொள்ளை நள்ளிரவில் - 2.6m யூரோ கொள்ளை !
உலகில் வாழும் மக்கள் எப்படி இதை பொறுத்துக் கொண்டு இருக்கிறார்கள்? கடவுள் துணை இருப்பார் என நம்புகிறேன் என கண்ணீருடன் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
Thanks for Your Comments