சாட்சாத் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் தான். ராகவா லாரன்ஸ் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் வீட்டில் கார் கிளீனராக இருந்த போது தன்னுடைய திறமையை நிரூபிக்க பலரிடம் வாய்ப்பு கேட்டு அலைந்திருக்கிறார்.
அதற்கு பிறகு மூன்று நாட்கள் கழித்து ரஜினியின் வீட்டிலிருந்து போன் வந்துள்ளது. கார் கிளீனர் வேலையை விட்டுவிட்டு நடனத்தில் மட்டும் கவனம் செலுத்தி என ரஜினி கூறியுள்ளார்.
அதற்கு பிறகு அண்ணாமலை படத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருந்த போது பிரபுதேவாவை அழைத்து ராகவா லாரன்ஸையும் அவரது டீமில் சேர்த்துக் கொள்ளும் படி கூறியுள்ளார் ரஜினி.
அதற்கு பிறகு பிரபுதேவா வீட்டிலிருந்து ராகவா லாரன்ஸுக்கு அழைப்பு வந்துள்ளது. ரஜினிகாந்த் உன் நடனத்தை பார்த்து வியந்து விட்டார். உனக்கு ஒரு பிரேக் தேவை.
(getCard) #type=(post) #title=(You might Like)
நாளையிலிருந்து என் டீமில் சேர்ந்து கொள் என பிரபுதேவா கூறினாராம். அதற்கு பிறகு படிப்படியாக வளர்ந்து நடன மாஸ்டராக, அதன்பின் நடிகராகவும் தற்போது இயக்குனராகவும் வளர்ந்து நிற்கிறார் ராகவா லாரன்ஸ்.
மிகவும் சாதாரண குடும்பத்தில் பிரிந்து, தன்னுடைய உழைப்பால் இன்று உயர்ந்து நிற்கிறார் ராகவா லாரன்ஸ். அதில் பெரும் தொகையை தான் நடத்தி வரும் ஆதரவற்ற மாணவர்கள் இல்லத்திற்கு வழங்குகிறார்.
நடனத்தில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இலவச நடன வகுப்புகளையும் நடத்தி வரும் ராகவா லாரன்ஸ் பல குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவியுள்ளார்.
அபினேஷ் என்ற சிறுவனின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி அளித்துள்ளார். அந்த சிறுவனுக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடைப்பயிற்சி செய்வதன் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் !
அபினேஷ், ராகவா லாரன்ஸ் உதவியால் மறுவாழ்வு கிடைக்கப் பெற்ற 130-வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks for Your Comments