வெளிநாடுகளில் பணி நிமித்தமாக தங்கி விட்டு இந்தியா வருபவர்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் எந்த அளவு தங்கம் கொண்டு வரலாம்? யார் யார் தங்கம் கொண்டு வரலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
என்ன காரணமோ தெரியவில்லை, வெளிநாட்டு நகை என்றால் அவர்களுக்கு அப்படி ஒரு பெருமை.
இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து பணிபுரிந்து சொந்த ஊருக்கு திரும்பும் என்.ஆர்.ஜக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருக்காக ஆசை ஆசையாக தங்கம் வாங்கிச் செல்வது வழக்கம்.
ஆனால் ஒவ்வொரு நாடுகளை பொறுத்தும் தங்கம் விலை மாறுபடுகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் கொண்டு சென்றால் அதற்கு சுங்கக் கட்டணத்தை இந்திய அரசு வசூலிக்கிறது.
பற்களில் இருந்து துர்நாற்றம் வருவது ஏன்?
ஆனால், இந்த சுங்கக் கட்டணத்தை கட்டாமல் தவிர்க்க பல்வேறு வடிவங்களில் தங்கத்தை மறைத்து விமானம், கப்பல் போக்குவரத்து மூலம் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து கடத்தி வருவது அதிகரித்து வருகிறது.
இப்படி தினமும் பல கோடிக்கணக்கிலான தங்க நகைகள் கடத்தல் காரர்களிடம் இருந்து பிடிபடுகின்றன.
அது மட்டுமின்றி யார் யார் எந்த அளவில், எந்த வடிவில் தங்கத்தை எடுத்து சென்றால் சுங்க கட்டணம் இல்லை என்ற விபரம் சாமானிய மக்களுக்கும் தெரியாமல் கூடுதல் நகையை கொண்டு சென்று விமான நிலையத்தில் அபராதத்தை கட்டும் நிலைக்கு தள்ளப் படுகிறார்கள்.
சுங்கக்கட்டணம் இன்றி யார் எவ்வளவு தங்க நகையை கொண்டு செல்லலாம்?:
இந்திய குடிமகனாக அவர் இருக்க வேண்டும். ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கி இருந்திருக்க வேண்டும். ஆண்கள் ரூ.50,000 என்ற மதிப்புக்கு மிகாமல் தங்க நகை கொண்டு வரலாம்.
பெண்கள் ரூ.1 லட்சம் என்ற மதிப்புக்கு மிகாமல் தங்க நகை எடுத்து வரலாம். நகையாக இருந்தால் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது. தங்க கட்டிகள், தங்க காசுகளுக்கு சுங்கக் கட்டணம்.
தக்காளி சூப் ரொம்ப பிடிக்குமா? அப்ப நீங்க ஸ்ட்ராங்க் தான் !
இந்திய அரசு வகுத்துள்ள இந்த வரையறைகளை தாண்டி இருந்தால் சுங்கக் கட்டணம் கட்டாயம் வசூலிக்கப்படும். அதே போல் மேற்கண்ட விதிகள் வெளிநாடுகளில் வாங்கிய நகைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
அவர்களில் சொல்லாமல் மறைத்து கண்டுபிடிக்கப் பட்டால் பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும் அல்லது கைது செய்யப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஹைவே விபத்தின் பின்னணியில் திகிலூட்டும் அரக்கன் !
இந்த அளவை தாண்டி நகை வாங்கி செல்பவர்கள் ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியவர்களாக இருந்தால் சுங்கக் கட்டணத்தில் 13.75% தள்ளுபடி செய்யப் படுவது குறிப்பிடத்தக்கது.
Thanks for Your Comments