உலகம் முழுவதும் பல மோசமான விமான கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. உலகின் முதல் விமானக்கடத்தல் தென் அமெரிக்க நாடான பெருவில் 1931ம் ஆண்டு நடைபெற்றது.
1958ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை உலகில் 48 விமான கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 1969 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் மிக அதிகமான விமானக் கடத்தல்கள் இடம் பெற்ற ஆண்டாகும்.
அந்த ஆண்டு மட்டும் 82 விமானங்கள் கடத்தப்பட்டன. 1976ல், 300 பயணிகளுடன் பறந்த ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. விமானத்தை விடுவிக்க மறுத்து, தீவிரவாதிகளுக்கு உதவி செய்தார், இடி அமீன்.
இஸ்ரேலிய கமாண்டோ படையினர் ஒரு விமானத்தில் வந்து அதிரடி தாக்குதல் நடத்தி 7 தீவிரவாதிகளையும், 20 உகாண்டா ராணுவத்தினரையும், சுட்டுக் கொன்று விட்டு, 300 பிரயாணிகளையும் பத்திரமாக மீட்டனர். இடி அமீனின் போக்கை உலக நாடுகள் கண்டித்தன.
எக்மோ (ECMO) என்றால் என்ன? படியுங்கள் !
கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் ஐசி 814 விமானத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்தினர். ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர்.
பின்னர் 3 முக்கிய தீவிரவாதிகளை விடுவித்து விமானத்தை மீட்டு வந்தனர். 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி காலை, அமெரிக்காவுக்கு அன்று மோசமான நாளாகவே விடிந்தது.
நான்கு ஜெட் விமானங்களை அல் கொய்தா தீவிரவாதிகள் கடத்தினர். தீவிரவாதிகள் இரண்டு விமானங்களை நியூயார்க்கின் இரட்டை கோபுரம் மீது அடுத்தடுத்து மோத விட்டனர்.
இன்னொரு விமானம் பென்டகன் மீது மோதியது. நான்காவது விமானம், ஷாங்க்ஸ்வில்லி என்ற இடத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த அதி பயங்கர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 5000 பேர் உயிரிழந்தனர்.
இது உலகின் மோசமான விமான கடத்தலாகும். இந்த சம்பவத்திற்குப் பின்னர் விமான நிலையங்களில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
ஆட்டோபான் நெடுஞ்சாலையின் சாலை விதிகள் !
உலகம் முழுவதும் விமான நிலையங்களில் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டாலும் அவ்வப்போது விமான கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
Thanks for Your Comments