உத்தரகாண்ட் சுரங்கம் குறித்து வெளியான தகவல்கள் !

2 minute read
0

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், மீட்பு பணியில் இருக்கும் சிக்கல்கள் குறித்த தகவல்கள் வெளியாகி யுள்ளன.

உத்தரகாண்ட் சுரங்கம் குறித்து வெளியான தகவல்கள் !
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. 

இந்த பணியின் போது கடந்த 12ம் தேதி திடீரென எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி யுள்ளனர். 

மொத்தம் 4.5 கி.மீ நீளம் கொண்ட இந்த சுரங்கத்தில் 41 தொழிலாளர்களும் வெளி வர முடியாதபடி 150 மீ நீளத்திற்கு மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

நீங்களும் இணைய வானொலியை ஆரம்பிக்கலாம் !

கடந்த 10 நாட்களாக இவர்களை மீட்க தொடர் முயற்சிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டிருக்கின்றனர். தொடர் முயற்சி காரணமாக அவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் உணவு பொருட்களை விநியோகிக்க முடிந்திருக்கிறது. 

இது உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. 

ஆனாலும், அவர்கள் உள்ளே சிக்கி 10 நாட்கள் ஆகிவிட்டதால் உடனடியாக அவர்களை மீட்க வேண்டும் என சக தொழிலாளர்களும், உறவினர்களும் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர்.

இப்படி இருக்கையில் தற்போது சுரங்கத்தில் சிக்கி யுள்ளவர்களின் வீடியோ வெளியாகி யுள்ளது. நாங்கள் இங்கு சிக்கி 10 நாட்கள் ஆகிவிட்டதால் நிலைமை மோசமாகி விட்டது. 

எனவே எங்களை உடனடியாக மீட்க வேண்டும் என வீடியோவில் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். 

அதே போல ஏன் 10 நாட்கள் ஆகியும் சுரங்கத்தில் இருக்கும் தொழிலாளர்களை மீட்க முடியவில்லை என்பது குறித்த தகவல்கள் வெளியாகி யுள்ளன.

அதாவது, இதுவரை சுரங்கத்தின் வாயிற் பகுதியில் நுழைந்து தொழிலாளர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி யடைந்துள்ளன. காரணம் அங்கிருக்கும் பாறைகளின் தன்மை தான். 

இறந்த உரிமையாளரை தட்டி எழுப்பிய நாயின் பாசப்போராட்டம் !

மற்ற மலை பகுதியில் இருக்கும் பாறைகளை போல உத்தரகாண்ட் மற்றும் இமயமலையை ஒட்டியுள்ள மலையின் பாறைகள் கடினமானவை கிடையாது. 

இந்த பாறைகளை கையில் எடுத்தாலே உதிரியாய் பெயர்ந்து வரும் அளவுக்கு மென்மையாக இருக்கிறது. எனவே நுழைவு வாயில் வழியாக உள்ள இடிபாடுகளை அகற்றும் போது மேலும் மண், பாறை சரிவுகள் ஏற்படுகின்றன. 

உத்தரகாண்ட் சுரங்கம் குறித்து வெளியான தகவல்கள் !

இதை பொருட்படுத்தாமல் மேலும் மேலும் தோண்ட தொடங்கினால் சுரங்கம் முழுமையாக இடிந்து விழும் அபாயம் ஏற்படும். எனவே மீட்பு படையினர், சுரங்கத்தின் மேல் பகுதியிலிருந்த துளை போட்டு அதன் மூலம் தொழிலாளர்களை மீட்க போராடி வருகின்றனர். 

இந்த முயற்சியிலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் மிகுந்த கவனத்துடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தான் மீட்பு பணிகள் தாமதமாக காரணமாக சொல்லப் படுகிறது.

அடிக்கடி பாண் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா ?

அதேபோல இவ்வளவு மென்மையாக இருக்கும் மலைகளில் ஏன் சுரங்கம் போன்ற கடினமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்? என இயற்கை ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி யுள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, March 2025
Privacy and cookie settings