கர்நாடக தலைநகர் பெங்களூரில் சினிமாவில் வருவதைப் போல நடந்த ஒரு மோசமான படுகொலை சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் வேகமாக வருகிறது.
இந்தச் சம்பவம் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணியளவில் நடந்துள்ளது. இந்த சம்பவம், பெங்களூரின் புலகேசி நகர்ப் பகுதியில் நடந்துள்ளது. இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்தக் கொலை சம்பவத்தில் அம்ரீன் என்பவர் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இரண்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மூன்று பேரும் கைது செய்யப் பட்டுள்ளார்.
பண தகராறு காரணமாக இந்த கொலையைச் செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தாகத் தகவல் வெளியாகி யுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்த நபர் காரில் இருந்து தப்ப சாலையில் இங்கும் அங்கும் ஓடுகிறார். இருப்பினும், அவரை விடாமல் துரத்தும் அந்த ஸ்கார்பியோ கார் அவரை திட்டமிட்டு முட்டி தூக்குகிறது. இந்த வீடியோ பார்க்கும் அனைவருக்கும் பீதியைத் தருவதாகவே இருக்கிறது.
முதலில் இந்த வீடியோ வெளியாகாத நிலையில், இதை விபத்து சம்பவம் என்றே நினைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே வீடியோ வெளியான பிறகே இது கொலை சம்பவம் என்பது உறுதியானது.
இதையடுத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். கொலை செய்யப்பட்ட நபர் அஸ்கர் என்று அடையாளம் காணப்பட்டது.
சில்லி சீஸ் பரோட்டா தயாரிப்பது எப்படி?
அஸ்கரின் நண்பரின் அளித்த வாக்குமூலமே இந்தக் கொலையைச் செய்தது யார் என்பதைக் கண்டறிய உதவியது. அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அம்ரீன் உட்பட 3 பேர் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
அஸ்கர் தனது காருக்கான பணத்தை அமீரனிடம் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் சண்டையாக மாறியது.
இது தொடர்பாக ஏற்கனவே ஜேசி காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப் பட்டுள்ளது. தன் மீதான புகாரைத் திரும்பப் பெறுமாறு அம்ரீன் அஸ்கரிடம் கேட்டுள்ளார். இருப்பினும் அதற்கு அஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கொலை நடந்த அன்று இரவு, அஸ்கரை பேச்சுவார்த்தை அழைப்பது போல அம்ரீன் அழைத்துள்ளார். அப்போது அம்ரீன் உட்பட மூன்று பேர் திட்டம் போட்டு அஸ்கர் மீது காரை மோதி கொலை செய்துள்ளனர்.
Thanks for Your Comments