இன்று தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் நம்பிக்கையாக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் இயக்குநராக அறிமுகமான அவர் கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் உச்சம் தொட்டு விக்ரம் என்ற ப்ளாக் பஸ்டர் வெற்றிப் படத்தை கொடுத்தார்.
அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து தான் இயக்கப் போகும் பட வேலைகளில் பிசியாக இருந்து வரும் லோகேஷ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
(getCard) #type=(post) #title=(You might Like)
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், 5 படங்களை டைரக்ட் செய்திருக்கும் நான், அடுத்ததாக G-squad என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன்.
முதற்கட்டமாக என்னுடைய நண்பர்கள், உதவி இயக்குநர்கள் ஆகியோரின் ஐடியாக்களை படமாக எடுக்க இருக்கிறேன். உங்களுடைய ஆதரவை வழக்கம் போல தர வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Need all your love and support 🤗❤️@GSquadOffl pic.twitter.com/9NWou59tuE
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 27, 2023
Thanks for Your Comments