திருட்டுகளில் பல வகை உண்டு. ஆனால், சில திருட்டு வகை விசித்திரமாக நமக்குத் தோன்றும். இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று தோன்றும் அளவிற்கு தான் இப்போது ஒரு திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடையின் விற்பனை மேலாளர் தான் இந்த அசாத்திய சம்பவத்தைச் செய்துள்ளார். அதுவும், ஒன்றிரண்டல்ல! வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் 53 புதிய ஆப்பிள் ஐபோன்களை அலேக்காக திருடி எடுத்துச் சென்றுள்ளார்.
மாஸ்கோ எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலே 53 புதிய ஐபோன்களை திருடிய ரஷ்ய நபர் ஒருவர் சமீபத்தில் கைது செய்யப் பட்டுள்ளார்.
இந்த கடையில் விற்பனை மேலாளராக அவர் நியமிக்கப்பட்டு வேலைக்கு சேர்ந்த முதல் நாள் அவர் இந்த செயலில் ஈடுபட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி யுள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் ஒரு சிறிய வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது.
பெயர் தெரியாத 44 வயதுடைய அந்த நபர், கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருந்துள்ளார்.
எதுவாக இருந்தாலும், அவர் ஆரம்பத்தில் ஒரு சுத்தம் செய்யும் துடைப்பானைக் கொண்டு கேமராவின் திசையை மாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது தெளிவாகப் பதிவாகி உள்ளது.
முதலில் அவர் தனது முயற்சியில் தோல்வியைத் தழுவினாலும், கொள்ளையடிக்கும் எண்ணத்தை கைவிடாமல் இருந்துள்ளார்.
புத்தம் புதிய ஐபோன்கள் மட்டுமின்றி, இந்த நபர் கடையின் கல்லாப் பெட்டியில் இருந்து இந்திய மதிப்பில் சுமார் ரூ.47,351 (53,000 ரூபிள்) பணத்தை எடுத்துக் கொண்டு சாதாரணமாக முன் வாசல் வழியாக வெளியே சென்றுள்ளார்.
இது குறித்து Lenta.ru எனும் ரஷ்ய செய்தி நிறுவனத்திற்கு காவல்துறை அலுவலர்கள் அளித்த தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மின்னணு கடையில் விற்பனை மேலாளராக வேலையில் சேருவதற்கு போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர் ஒரு நாள் அனைவரையும் விட முன்னதாக கடைக்கு வர முடிவு செய்து, அனைத்து மதிப்புமிக்க பொருள்களையும் திருடி விட்டு நகரத்தை விட்டு செவஸ்டோபோலில் உள்ள தனது வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இத்தனை காரியங்களையும் செய்த அவர் தன் முகத்தை ஒருமுறை கூட கேமரா முன்பாக மறைக்கவில்லை என்பது தான் காவல் அலுவலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இது காவல்துறை வெளியிட்ட வீடியோ பதிவில் தெளிவாக தெரிகிறது. பின்னர் அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, தெற்கு உக்ரைனின் கிரிமியாவில் உள்ள செவாஸ்டோபோலில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரது வீட்டில் திருடப்பட்ட போன்கள் சிலவற்றை காவல் துறையினர் கைப்பற்றினர். மாஸ்கோவிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் சில ஐபோன்களை விற்றதாக அந்த நபர் காவல் துறையிடம் தெரிவித்தார்.
Thanks for Your Comments