இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் மனைவி என்று பழங்குடியின மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் உடல் நலக்குறைவால் காலமானார்.
கடந்த 1959 ஆம் ஆண்டு புத்னி மஞ்சியன் என்ற அந்த பழங்குடியின பெண்ணுக்கு 16 வயது ஆகியிருந்த போது, அவரது வாழ்க்கையையே திருப்பி போடும் அளவுக்கு ஒரு சம்பவம் நடைபெற்றது.
அதாவது, அதே ஆண்டு அணைக்கட்டு திட்டம் ஒன்றை தொடங்கி வைப்பதற்காக இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தன்பத் மாவட்டம் அருகே உள்ள பழங்குடியின பகுதிக்கு சென்றார்.
வெறும் வயிற்றில் பச்சை முட்டை ஆரோக்கியமா?
அப்போது நேரு பழங்குடியின மக்களை கவுரவிக்கும் விதமாக அங்கு நின்று கொண்டு இருந்த புத்னி மஞ்சியனுக்கு மாலை அணிவித்தார்.
ஆனால், சந்தால் என அழைக்கப்படும் பழங்குடியினத்தை சேர்ந்த அந்த பெண்ணின் சமூகத்தை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்ததால் அதை திருமணாக கருதினர்.
இதற்கு மத்தியில் அவர் வேலை பார்த்து வந்த தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
அதன் பின்னர் ஜார்க்கண்டிற்கு குடி பெயர்ந்த புத்னி, சுதிர் தத்தா என்பரை மணந்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையே கடந்த 1985-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பகுதிக்கு சென்றார்.
அந்த சமயத்தில், அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் புத்னி மஞ்சியன் நிலையை எடுத்துக் கூறினர். ராஜிவ் காந்தி ரொம்பவே வருத்தப்பட்டார். இதையடுத்து மீண்டும் தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தில் வேலை வழங்கப்பட்டது.
தொப்பை போட வைக்கும் செயற்கை குளிர்பானங்கள் !
அங்குள்ள பூங்காவில் அமைக்கப்பட்டு இருக்கும் நேருவின் சிலை அருகே நினைவிடம் ஒன்றையும் புத்னிக்கு அமைக்கப்பட வேண்டும் எனவும் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் இது குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசிய பிறகே முடிவு எடுக்க முடியும் என தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தின் தலைமை அதிகாரி கூறினார்.
Thanks for Your Comments