இரு சக்கர வாகனங்களில் தொலை தூர பயணங்கள் சென்று வந்த நடிகர் அஜித் குமார், அதையே தொழிலாக ஆரம்பிக்க போவதாக அறிவித்திருந்தார். அந்த நிறுவனத்திற்கு வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்று பெயரிட்டுள்ளார்.
யாராவது இரு சக்கர வாகனத்தில் வந்தால் அவர்களை ஆச்சர்யத்துடன் பார்ப்பார்கள். அதுவே கொஞ்ச காலம் கழித்து சென்னையில் இருந்து மதுரைக்கும், சென்னையில் இருந்து கோவைக்கும் சர்வ சாதாரணமாக மக்கள் இரு சக்கர வாகனத்தில் செல்ல தொடங்கினார்கள்.
முதுமையை விரட்டும் மின் தூண்டல் சிகிச்சை !
இப்போது பலருக்கும் மன அழுத்தம் ஏற்பட்டால் இரு சக்கர வாகனத்தில் தொலைதூர பயணம் செய்ய புறப்படுகிறார்கள். அதிலும் 2கே கிட்ஸ்கள் காலத்தில் லடாக்கிற்கு சர்வ சாதாரணமாக சென்று வருகிறார்கள்.
சென்னை டூ கொல்கத்தா, சென்னை டூ கோவா, திருவனந்தபுரம் டூ மும்பை, காஷ்மீர் டூ கன்னியாகுமரி, மேகலாயா, சிக்கிம் என பிடித்த இடங்களுக்கு எல்லாம் இரு சக்கர வாகனத்திலேயே பலரும் சுற்றுலா செல்கிறார்கள்.
இப்படி சுற்றுலா செல்பவர்களுக்காக புதிய நிறுவனம் தொடங்கலாமே என்று யோசித்தவர் அதற்கான அறிவிப்பினை அண்மையில் வெளியிட்டார்.
தொலை தூரங்கள் இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா சென்று வருவோருக்கு பாதுகாப்பான பயணம் மற்றும் அறியப்படாத இடங்களை காட்டுவது போன்ற சேவைகளை செய்ய நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க போவதாகவும் அஜித் குமார் கூறியிருந்தார்.
சொன்னபடியே நடிகர் அஜித் குமார் சூப்பர் பைக் சுற்றுலா தொடர்பாக 'வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்' என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
வி செண்டிமெண்ட் அஜித்குமாருக்கு பிடிக்கும் என்பதால் வி என்ற எழுத்தில் தொடங்கும் வண்ணம் பெயரை தேர்வு செய்துள்ளாராம்.
பூமியின் மையத்தில் வெப்பம் எந்த அளவுக்கு இருக்கும் !
நாடு முழுவதும் சூப்பர் பைக்கில் நாட்டின் முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட இனி அஜித் குமாரின் 'வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்' நிறுவனத்தை அணுகலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
நடிகர் அஜித் குமார் போலவே பலரும் இயற்கை மற்றும் பயணங்கள் மீது அதீத காதல் கொண்டவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு அஜித் குமாரின் இந்த புதிய நிறுவனம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புவோம்.
பல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள் !
நடிப்பை தாண்டி அஜித் குமார், பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ், ட்ரோன்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார். இப்போது பைக் டூர் நிறுவனம் ஆரம்பித்திருப்பது வித்தியாசமான முயற்சியாக பார்க்கப் படுகிறது.
Thanks for Your Comments