மன்னிப்பு கேட்கும் சாதி இல்லை? மன்சூர் அலிகான் !

0

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, பல முன்னணி நடிகர்களுடன் கொடூர வில்லனாக நடித்து கவனம் பெற்றவர் மன்சூர் அலிகான். 

மன்னிப்பு கேட்கும் சாதி இல்லை? மன்சூர் அலிகான் !
வில்லத்தனமான நடிப்பிற்கு புகழ்பெற்ற மன்சூர் அலிகான், தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். 

இதன் வெளிப்பாடாக, நடிகர் விஜயின் லியோ படத்தில் இருதயராஜ் என்ற கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகானை லோகேஷ் நடிக்க வைத்தார்.

இந்த நிலையில் லியோ படம் தொடர்பாக அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், லியோ படத்தில் பலாத்கார காட்சியே தனக்கு கிடைக்க வில்லை என பிறர் முகம் சுழிக்க வைக்கும் தனது மனக் குமுறலை வெளிப்படுத்தினார். 

உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது எப்படி?

இதில் திரிஷா பெயரை பயன்படுத்தி கீழ்த்தரமாக பேசியிருந்தார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகை த்ரிஷா, இதற்கு தனது கண்டனங்களை தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த சர்ச்சை பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மன்சூர் அலிகான் ஏற்கனவே இதற்கு அலட்சியமாக விளக்க மளித்திருந்தார். 

தொடர்ந்து நேற்று தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தர விட்டிருந்தது.

இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், நான் திரிஷா குறித்து தவறாக எதுவும் கூறவில்லை. 

சர்ச்சை பேச்சு வீடியோ குறித்து என்னிடம் யாரும் விளக்கம் கேட்கவில்லை எனவும் கூறியுள்ளார். நடிகர் சங்கம் இமாலய தவறை செய்துள்ளது. கண்டன அறிக்கையை நடிகர் சங்கம் வாபஸ் பெற வேண்டும். 

என்னை கருப்பு ஆடாக காட்டி விட்டு நடிகர் சங்கம் நல்ல பேர் எடுத்து கொள்கிறார்கள். நான் நடிகர் சங்கத்திற்கு போன் செய்த போதும் யாரும் எடுக்கவில்லை. இது தொடர்பாக நான் நிச்சயம் வழக்கு தொடர்வேன்.

கிரீன் வெஜிடபிள் ரைஸ் செய்வது எப்படி?
மேலும் என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் என்று கூறிய அவர் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும், நான் மன்னிப்புக் கேட்கக் கூடிய ஜாதியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

எரிமலை குமுறினால் எல்லோரும் துண்டைக் கானோம், துணிய காணோம் என ஓடிப்போய் விடுவீர்கள் என தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings