ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து பரிதாபமாக 2ஆவது இடம் பிடித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிக பட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், ரோகித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து விளையாடிய அவர் 120 பந்துகளில் 15 பவுண்டரி உள்பட 4 சிக்ஸர்கள் உள்பட 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தாமிர பாத்திரத்தில் உள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் நன்மைகள் !
மார்னஷ் லபுஷேன் 58 ரன்கள் எடுக்க, கிளென் மேக்ஸ்வெ 2 ரன்கள் எடுத்து வெற்றி தேடிக் கொடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் 8 முறை இறுதிப் போட்டிக்கு வந்துள்ள ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
2003 ஆம் ஆண்டுக்கு பிறகு 2ஆவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.
உலகக் கோப்பை தொடரில் 765 ரன்கள் குவித்த விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தொடர் நாயகனுக்கான விருது வழங்கினார்.
பனிக்குடத்தில் தண்ணீர் இருந்தும் எப்படி குழந்தை உயிர் வாழ்கிறது?
இதில் வின்னிங் டீம் பவுலரான ஆடம் ஜம்பா 23 விக்கெட்டுகள் மற்றும் முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி தொடர் நாயகனுக்கான விருது பட்டியலில் இருந்தனர். எனினும், அதிக ரன்கள் குவித்த விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் இருவரும் இணைந்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸிடம் உலகக் கோப்பை டிராபியை வழங்கினர்.
இது வரையில் விளையாடிய 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று மொத்தமாக 10 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா, கடைசியாக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து, 10 வெற்றிக்கும் எந்த பலனும் இல்லாமல் செய்துவிட்டது.
அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டிக்கு முன்னதாக பேட் கம்மின்ஸ் சொன்னதை, இறுதிப் போட்டியில் செய்து காட்டியுள்ளார்.
தக்காளி மிக்ஸ் பனீர் மசாலா செய்வது எப்படி?
இறுதிப் போட்டியில் இந்திய ரசிகர்களை அமைதி ஆக்குவோம் என்று கூறியிருந்தார். அதன்படியே இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றியதோடு, கடைசியாக வெற்றி பெற்று 6ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.
Thanks for Your Comments