ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியாமல் இருந்த ரோகித் சர்மா !

0

ரசிகர்களின் பார்வை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பக்கம் திரும்பியுள்ள நிலையில், பள்ளி பருவத்தின் போது அவருக்கு ஏற்பட்டிருந்த வறுமை குறித்து அவரது பயிற்சியாளர் உருக்கமாக கூறியுள்ளார். 

ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியாமல் இருந்த ரோகித் சர்மா !
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி நாளை ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினால், கபில் தேவ், தோனிக்கு பின்னர் இந்திய வரலாற்றில் இடம் பிடிக்கும் கிரிக்கெட் வீரராக கேப்டன் ரோஹித் சர்மா மாறுவார். 

நடப்பு உலகக்கோப்பை தொடரில் எத்தனையோ வீரர்கள் இருந்தாலும் அவர்களில் அதிக கவனத்தை பெற்றவர் ரோஹித் சர்மா.

மைதானத்தில் அமைதியான சூழலுடன் எதையும் பொறுமையாக கையாளுவது, நிதானம், ஃபீல்டிங் அமைப்பு, பவுலிங் தேர்வு, டி.ஆர்.எஸ் அப்பீல் என அனைத்து சூழல்களிலும் ரோஹித்தின் செயல்பாடுகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. 

அத்துடன் பவர் ப்ளேயில் டாப் கியரில் அவர் ஆடும் ஆட்டம், இந்திய அணி 300க்கும் அதிகமான ரன்களை சர்வ சாதாரணமாக எட்டுவதற்கு உதவியுள்ளது. 

இந்நிலையில் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்தியா நாளை அகமதாபாத் மைதானத்தில் எதிர் கொள்ளவுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி கோப்பையை கைப்பற்றாத நிலையில், இந்த முறை ரோஹித் தலைமையிலான அணி உலகக் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். 

இத்தகையை விவிஐபியாக மாறியுள்ள ரோஹித் சர்மா, ஒரு காலத்தில் ரூ. 275 ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாதவராக இருந்துள்ளார்.

பள்ளிக் காலத்தில் ஆஃப் ஸ்பின்னராக இருந்த ரோஹித் தனது மாமா மற்றும் தாத்தா பாட்டியுடன் மும்பையின் போரிவாலி பகுதியில் வசித்து வந்துள்ளார். 

ஒருமுறை அவரது மாமா அங்கு பிரபல பயிற்சியாளராக இருந்த தினேஷ் லாடிடம் ரோஹித்தை அழைத்து சென்றுள்ளார். 

ரோஹித்தின் திறமையை கண்டறிந்த தினேஷ், அவரை சுவாமி விவேகானந்தா என்ற பள்ளியில் படிக்க வைக்குமாறும், அங்கு விளையாட்டில் நல்ல பயிற்சி அளிக்கப் படுவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த ரோஹித்தின் மாமா, இப்போது படிக்கும் பள்ளியில் ரூ. 30 மட்டும் தான் கட்டணம். எங்களால் நீங்கள் சொல்லும் பள்ளியில் ரூ. 275 செலுத்தி ரோஹித்தை படிக்க வைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். 

இதைக் கேட்ட பயிற்சியாளர், பள்ளி நிர்வாகத்திடம் சிபாரிசு செய்து இலவசமாக படிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார். 

இது பற்றி அளித்த பேட்டியில் பின்னாளில் மிகச்சிறந்த ஆட்டக்காரராக ரோஹித் வருவார் என்று அப்போதே எனக்கு தெரியும். எனவே தான் அவரை விட்டு விட என்னால் முடியவில்லை என்று கூறினார்.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings