கர்நாடகாவில் சமூக நலத்துறை அமைச்சர் மகாதேவப்பாவின் காலுக்கு அவரது பாதுகாவலரான ‛கன்மேன்' ஷூ போட்டு விடும் வீடியோ வலை தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதையடுத்து அமைச்சரவை அமைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்சி மகாதேவப்பா சமூக நலத்துறை அமைச்சரானார்.
இவர் முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூரை சேர்ந்தவர். அதாவது மைசூர் மாவட்டம் டி நரசிப்புரா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தான் மகாதேவப்பா அமைச்சராக உள்ளார்.
மேலும் இவரும், சித்தராமையாவும் மிகவும் நெருக்கமானவர்கள். கடந்த 2013-2018 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா முதல்வராக இருந்த போது மகாதேவப்பா அமைச்சராக இருந்தார்.
அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் தற்போது சமூக நலத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் நேற்று அமைச்சர் மகாதேவப்பா தார்வார் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளி மாணவர்களின் சமூக நலத்துறை விடுதிகளை ஆய்வு செய்ய சென்றார்.
மேலும் விடுதி சமையலறைக்கு சென்று அவர் பார்வையிட சென்றார். அப்போது அவர் தான் அணிந்திருந்த ஷூவை கழற்றி விட்டு உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு அவர் சமையலறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரது பாதுகாவலர் (Gunman) ஷுவை கையில் எடுத்து அவரது காலில் மாட்டி விட்டார். இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.
இந்த வீடியோ தற்போது இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அமைச்சர் மகாதேவப்பாவை பாஜகவினர் உள்பட பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Peak Elitism of Congress Party in Dharwad Karnataka - Social Welfare Minister HC Mahadevappa gets his shoes put on by his Gunman pic.twitter.com/tT47K5eTZr
— Rosy (@rose_k01) November 8, 2023
Thanks for Your Comments