இந்த சூழலில் தீபாவளிக்கு கூட சொந்தங்களோடு தனது நேரத்தை செலவிடாமல், மக்களுக்காக களமிறங்கி பணி செய்த சிங்கப்பூர் போலீஸ் சார்ஜென்ட் நிவேதா விஜயகுமார் பற்றிய ஒரு பதிவை பகிர்ந்து கொண்டுள்ளது சிங்கப்பூர் போலீஸ் துறை.
இந்த தீபாவளிக்கு குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ஓய்வு எடுக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தும், சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர், அதற்குப் பதிலாக களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார்.
ரோச்சர் நெய்பர்ஹூட் போலீஸ் சென்டரின் (NPC) அதிகாரியான சார்ஜென்ட் நிவேதா விஜயகுமார், இந்த தீபாவளி பண்டிகை வார இறுதியில் லிட்டில் இந்தியாவில் ரோந்து செல்ல முன்வந்தது ஏன் என்பதை SPF வெளியிட்ட பேட்டியில் விளக்கியுள்ளார்.
ஆனால் இந்த காலகட்டத்தில் எனது தமிழ் மொழி திறன், லிட்டில் இந்தியா பகுதிக்கு வரும் பல தமிழர்களுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணினேன் ஆகவே விடுப்பு எடுக்காமல் பணி செய்ய முன்வந்தேன் என்று நிவேதா கூறியுள்ளார்.
Thanks for Your Comments