பதிமூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இன்று மோதிக் கொண்டதால், போட்டிக்கு ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அதே போல் இரண்டாம் பகுதியில் பந்து வீச வரும் பொழுது அவர்கள் எதிரணியின் பேட்டிங் யூனிட்டை மொத்தமாக முடக்கி போட்டு மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுக் கொண்டு வந்தார்கள்.
அதே சமயத்தில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிராக இலக்கை துரத்தும் பொழுது அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்கள்.
மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இலக்கை துரத்தும் போதும் பரபரப்பான கட்டத்தில், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்கள்.
கிளியோபட்ராவின் பேரழகிற்கு காரணம் இந்த இயற்கை பொருட்கள் தானாம் தெரியுமா?
இதற்கேற்ற வகையில் இன்று இந்திய அணி நிர்ணயித்த 327 ரன்கள் என்கின்ற பெரிய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா வெறும் 83 ரன்களுக்கு சுருண்டு 243 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
தோல்விக்குப் பிறகு பேசிய தென்ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறும் பொழுது இந்தப் போட்டி எப்படியான சவாலாக இருக்கும் என்று நாங்கள் அறிவோம்.
மேலும் நாங்கள் சேஸ் செய்வது குறித்து வெளியில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதும் தெரியும். ஆனால் இன்று நாங்கள் எல்லாம் தெரிந்தும் எந்த நியாயத்தையும் செய்யவில்லை.
இந்தியா விளையாடும் பொழுது எங்களுக்கு விக்கெட் வீழ்த்துவது பெரிய சவாலாக இருந்தது. இந்தியா பெரிய ஸ்டாண்டுகளை உருவாக்கியது. இந்த கண்டிஷன் எங்களுக்கு பெரிய பாடமாக இருந்தது.
வியர்வை நாற்றம் அதிகமா வீசுதா? அப்ப இத யூஸ் பண்ணுங்க !
நாங்கள் விளையாடுவதற்கு விக்கெட் மிகவும் சந்தேகத்துக்குரிய வகையில் அமைந்தது. நாங்கள் சூழ்நிலைக்கு சரியாக பொருந்தவில்லை. சூழ்நிலைக்கு தகுந்தவாறு திறமைகளை மாற்றி தகவமைந்து கொள்வது முக்கியம் என்று கூறியிருக்கிறார்!
Thanks for Your Comments