பேருந்து சிக்கி மாணவணின் கால்கள் இழப்பு.. கண்ணீர் விட்டு கதறிய தாய் !

0

குன்றத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன், பள்ளி முடிந்து சக மாணவர்களுடன் அரசுப் பேருந்தில் படிக்கட்டு பகுதியில் தொங்கியபடி பயணித்ததாக கூறப்படுகிறது. 

பேருந்து சிக்கி மாணவணின் கால்கள் இழப்பு.. கண்ணீர் விட்டு கதறிய தாய் !
அப்போது பேருந்து குன்றத்தூர் தேரடி பகுதியை கடந்த போது எதிர்பாராத விதமாக முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவன், பேருந்தின் படியிலிருந்து தவறி கீழே விழுந்ததாக சொல்லப் படுகிறது.

எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்பக்க சக்கரம் மாணவனின் கால்கள் மீது ஏறியதில் மாணவரின் இரண்டு கால்களும் நசுங்கியது. 

உடனே அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் ஆம்புலன்ஸுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

கபசுர குடிநீர் என்பது என்ன?கொரோனாவை குணப்படுத்துமா?

உடனே தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அதன் பிறகு, மேல் சிகிச்சைக்காக சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய சிகிச்சைகள் அளித்து வந்த மருத்துவர்கள், 

அந்த மாணவரின் கால்களை அகற்ற வேண்டும் இல்லையெனில் உயிருக்கு ஆபத்தாக போகக் கூடும் என்று. நேற்று (நவ.17) இரவு அறுவை சிகிச்சை செய்தனர். அதில் மாணவனின் 2 கால்களும் அகற்றப்பட்டன.

இந்நிலையில் முதற்கட்ட அறுவை சிகிச்சை மட்டுமே தற்போது நடைபெற்றுள்ள தாகவும், கால் மூட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பேருந்தில் பயணம் செய்து மாணவன் கால்களை இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களைக் கண்டித்து, தாக்கியதாக கைது செய்யப்பட்ட நடிகை ரஞ்சனா நாச்சியார், மருத்துவ மனைக்கு சென்று காயமடைந்த மாணவரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

கறிவேப்பிலை மீன் வறுவல் செய்வது எப்படி?

இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

மூடப்பட்ட கதவுகளை உடைய இலவச பேருந்துகளை பள்ளி மாணவர்களுக்காக அரசு இயக்க வேண்டும் என நடிகை ரஞ்சனா நாச்சியார் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings