தக்காளி காய்ச்சல் என்பது ஒரு தொற்றக்கூடிய காய்ச்சலாகும். இந்த காய்ச்சல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகளவில் பாதிக்கிறது.இந்த தக்காளி காய்ச்சல் வைரஸ் மூலம் பரவி தோலில் சிவப்பு நிற புடைப்புகளை உண்டாக்கும்.
இந்த காய்ச்சலின் அறிகுறிகளாக சொறி, மூட்டுவலி மற்றும் காய்ச்சல் போன்றவை அடங்கும். பொதுவாக குழந்தைகள் அழுக்கான இடங்களை தொடுவதாலும் நேரடியாக கையை வாயில் வைப்பதாலும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாலும் இந்த வைரஸ் எளிதாக பரவி விடுகிறது.
சரி வாங்க, இந்த தக்காளி காய்ச்சலை எப்படி போக்கலாம் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
விதவிதமா சரக்கடிக்கும் ஸ்ரீ ரெட்டி - எங்க இருந்து கிடைக்குது?
தக்காளி காய்ச்சல் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவுமா?
குழந்தைகளிடம் இருக்கும் சுகாதாரமின்மை மற்றும் கையை வாயில் வைக்கும் பழக்கம் காரணமாக இந்த தொற்று ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவுகிறது.
இந்த காய்ச்சல் பல வாரங்கள் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த காய்ச்சல் வருவதற்கு முன்னரே குழந்தைகளுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள் . :
* அதீத காய்ச்சல்
* தோலில் தடிப்புகள் தோன்றுதல்
* கடுமையான நீரிழப்பு ஏற்படுதல்
* சோர்வு
* மூட்டு வலி
* உடம்பு வலி
* சோம்பல்
* வயிற்றுப் பிடிப்புகள்
* சோர்வு
* வயிற்றுப் போக்கு
* வீங்கிய மூட்டுகள்
* தோல் எரிச்சல்
* பசியிழப்பு
* கைகள், முழங்கால்கள், பிட்டம் ஆகியவற்றில் ஏற்படும் நிறமாற்றம்
* மூக்கு ஒழுகுதல் மற்றும் தும்மல்
* அடிக்கடி இருமல் ஏற்படுதல்
பெண்களுக்கு சினைப்பை கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்.
பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தை பராமரியுங்கள் . :
வீட்டு வைத்திய முறைகள் எதுவும் வேண்டாம் . :
உங்கள் குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
தோலில் சிவப்பு கொப்புளங்கள், தோல் எரிச்சல், மூட்டு அசெளகரியம், மூக்கு ஒழுகுதல், அதிக காய்ச்சல், குமட்டல், உடம்பு வலி, இருமல், தும்மல், வயிற்றுப் போக்கு மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் வீட்டு வைத்திய முறைகளை பின்பற்ற வேண்டாம்.
இது உங்களுக்கு ஆபத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை முறைகளை மேற்கொள்வதே நல்லது.
சரியான சுகாதாரத்தை கடைபிடியுங்கள் . :
மேலும் சொறி போன்ற அறிகுறிகள் இருந்தால் நகங்களைக் கொண்டு சொறியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் தொற்று எளிதாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
உங்களை நீரேற்றமாக வைத்து கொள்ளுங்கள் . :
குழந்தைகளை நீரேற்றமாக வைத்துக் கொள்வது நல்லது. தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து குழந்தைகளுக்கு பருக கொடுங்கள்.
தண்ணீரைத் தவிர ஆரோக்கியமான பானங்களான பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை உணவில் சேர்க்க கொடுங்கள்.
குண்டாகாதீங்க... அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது !
தக்காளி காய்ச்சல் சிகிச்சை முறைகள் . :
அறிகுறிகள் குறையும் வரை கவனமாக இருக்க வேண்டும். மூக்கு ஒழுகுதல், தும்மல் போன்றவற்றிற்கு தூய்மையான கர்ச்சீப்பை பயன்படுத்த வேண்டும். அறிகுறிகள் குறையும் வரை தனிமைப் படுத்துவது அவசியம்.
கவனத்தில் வைக்க வேண்டியவை . :
தக்காளி காய்ச்சலும் டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சலைப் போன்றது தான். எனவே நோயாளி குணமாகும் வரை அவரை தனிமையில் வைக்க வேண்டும்.
ஏனெனில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து எளிதாக மற்றவருக்கு பரவ நேரிடலாம். பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்தும் உடைகள், பாத்திரங்கள் மற்றும் படுக்கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.
வெதுவெதுப்பான நீரில் போட்டு நன்றாக சுத்தம் செய்து உலர வையுங்கள். அப்புறம் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை அவருக்கு கொடுத்து வாருங்கள்.
Thanks for Your Comments