நமது தோல் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பது மட்டுமின்றி, உடலின் வெப்பநிலையை சமப்படுத்தவும், வியர்வையை வெளியேற்றவும் பயன்படுகிறது.
தோலில் தோன்றும் நுண்கிருமிகளால் உடலில் பல உபாதைகள் உண்டாகி விடுகின்றன.
தோலில் அரிப்பு, வெடிப்பு, தோல் சிவத்தல், செதில் செதிலாக உதிர்தல், நிறமாற்றம், தோலில் உணர்ச்சியின்மை போன்ற பல உபாதைகளுக்கு தோலில் வளரும் கிருமிகளே காரணமாக அமைகிறது.
தயிருடன் சில உணவுகளை உண்ணக்கூடாது ஏன்?
இந்த கிருமிகள் தோலின் அடுக்குகளை கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி, தோலின் எண்ணெய் கோளங்களை அடைத்து, வியர்வை துவாரங்களை சிதைத்து,
தோலுக்கு நிறத்தை தரும் மெலனின் மற்றும் ரோமத்திற்கு நிறத்தை தரும் கெரட்டின் நிறமிகளை அழித்து கொஞ்சம் கொஞ்சமாக நுண்ணிய ரத்தக்குழாய் மூலமாக ரத்த சுற்றோட்டத்தில் கலக்கின்றன.
இந்தக் கிருமிகள் மூச்சுப்பாதை, உணவுப்பாதை என பலவிடங்களில் பல தொல்லைகளை உண்டு பண்ணுகிறது.
தோல் வறட்சி, சொரி, சிரங்கு, படை, வெண்படை, கரப்பான், விரலிடுக்கில் தோன்றும் குருக்கள், முகப்பரு, உடம்பில் ஆங்காங்கே அவ்வப்போது தோன்றும் தடிப்பு,
வெண்குட்டம், தலையில் தோன்றும் பொடுகு, பூச்சிவெட்டு, நகத்தில் தோன்றும் நகச்சுற்று, நகச்சொத்தை, தொடையிடுக்கு, அக்குள், கழுத்துப் பகுதிகளில் கடும் அரிப்பு போன்ற பல தொல்லைகள் உண்டாகின்றன.
பலரையும் தாக்கும் நோய்களில் சரும நோயும் ஒன்று. பலரின் ஏளனப் பார்வைக்கு நம்மை உள்ளாக்கி மன உளைச்சலை உண்டாக்கும் நோய்களில் இதுவும் ஒன்றாகும்.
சரும நோய்க்கு ஆளானவர் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். சரும நோய்களுக்கு நவீன மருத்துவத்தை விட பாரம்பரிய முறை இன்னும் சிறந்த முறையில் கை கொடுத்து உதவுகிறது. மேலும் பக்க விளைவுகள் இல்லாதது.
2. அறுகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மைய அரைக்க வேண்டும். அதை தோல் வியாதி இருக்கும் இடத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் குளித்து வந்தால் நல்ல குணம் தெரியும்.
3. வல்லாரையை எடுத்து சுத்தம் செய்து நிழலில் காய வைத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். பரங்கிச் சக்கையை எடுத்து காய வைத்து பொடி செய்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு பொடியையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அந்தப் பொடியில் ஐந்து முதல் ஆறு கிராம் அளவு எடுத்து காலை, மாலை பசும் வெண்ணெயில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குறையும்.
ஆரோக்கியமற்ற உணவுகள் யாவை?
4. குப்பைமேனி சொறி சிரங்குக்குக் கை கண்ட மருந்து. குப்பை மேனி இலை ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு, கல் உப்பு கொஞ்சம் சேர்த்து அரைத்து, அரிப்பு கண்ட இடத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து செய்து வந்தால் ஊறல், படை எல்லாம் ஓடிப்போய் விடும். குணம் தெரிந்தவுடன் மருந்தைக் கை விட்டு விடலாம். இதனைக் காலை நேரத்தில் பூசிக் குளித்தால் நல்லது.
5. குடசப்பாலை பட்டையை மையாக அரைத்து அதனுடன் பசுவின் சிறுநீரை கலந்து உடலில் பூசி வந்தால் சரும நோய்கள் குறையும்.
7. கல்லுருவி இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றை உடலில் பூசி வந்தால் தோல் நோய்கள் குறையும்.
இந்தியாவிடம் மட்டும் தான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இருக்கிறதா?
8. 20 கிராம் நன்னாரி வேரை அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். இது 200 மிலி ஆகியதும் இறக்கிவிட வேண்டும். காலையில் 100 மிலி, சாயங்காலம் 100 மிலி குடித்து வந்தால் தோல் நோய் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.
Thanks for Your Comments